Sunday, January 15, 2012

இராவணன் கதை

: http://www.natpu.in/?p=19802#comment-761


ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் தென்பகுதியில் சிறிய நிலப்பகுதியும் பீகார் நிலப்பகுதியில் சிறிய நிலப்பகுதியும் மத்தியப்பிரதேசத்தில் சோனாறு நிலப்பகுதியும் நர்மதாவின் துணை ஆறுகளான கிரன், கையர், ஆற்றுநிலப்பகுதியும் இராவணன் என்பவனின் ஆட்சியில் இருந்தன. அவனது சகோதரியான தடாகையின் மூலம் பீகார் மாநிலத்தில் சில பகுதிகள் ஆளப்பட்டன. விராடன் மூலம் சித்திரக்கூடத்திற்கும் தெற்கில் இருந்த பகுதி ஆளப்பட்டது. அவனது சகோதரன் கரன் மூலம் சோனாற்றுப்பகுதி ஆளப்பட்டது. தடாகையின் மகன் மாரீசன் மூலம் சோனாற்றினோடு கலக்கும் பெரிமா ஆற்றின் பகுதியான நோக்டா பகுதி ஆளப்பட்டது. கிட்கிந்தை என்ற பகுதி வாலி என்பவன் மூலம் ஆளப்பட்டு வந்தது.

இராவணன் இந்திய நாட்டின் மிகவும் பழைமையான சைவ மதத்தைப் பின்பற்றி, யோகக் கலையில் தேர்ச்சிபெற்று வாசியோகத்திலும் பயிற்சி உடையவனாக இருந்தான். அதனால் அவன் தனது உடலில் நோய்நொடி இல்லாமல் நலமுடன் வாழ்ந்தான்.

வாலி மற்றும் அவன் மக்களோடு இராவணன் மக்களுக்கு தொடர்ந்து பகை இருந்தது. மேலும் கங்கையின் நிலப்பகுதியில் இருந்த ஆரிய மன்னர்கள் தங்கள் ஆரிய இனம் பரவிட விரும்பினர். அதற்காக முனிவர்களையும் இரிழிகளையும் இந்தியப் பழங்குடிகள் செல்வாக்கு பெறமுடியாமல் இருக்கவும், அவர்கள் ஆரியர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதற்குரிய கருத்துரை செய்யவும் அனுப்பி வைத்தனர். அவ்வாறு அவர்கள் அனுப்பி வைத்தது பல நூற்றாண்டுகளாக இருந்தது. இராவணன் காலத்திலும் அவ்வாறு வந்தவர்கள் இராவணன் நாட்டு மக்களுக்கு எதிராகப் பசு, மாடுகள், மான்கள், மனிதர்களைக் கொன்று வந்தனர். இதனால் இராவணன் நாட்டு மக்களுக்கும், ஆரியர்களுக்கும் பகை இருந்து வந்தது. இதனால் முனிவர்களும், இரிழிகளும் பல்வேறு திட்டங்கள் இட்டு இராவணன் நாட்டு மக்களை அழிக்கத் திட்டம் இட்டனர். பல்வேறு போர்கள் நிகழ்ந்தன. அவற்றில் இராமன் என்பவன் வந்து போரிட்டு இராவணனைக் கொன்றதை ஆரியர்கள் பெரும் சாதனையாகக் கருதிக் கொண்டாடி வருக்கின்றனர்.

இராமன் உத்திரப்பிரதேசத்தில் அயோத்தியில் பிறந்தவன். அவனது தந்தை 60,000 பெண்களைத் தன் அந்தபுரத்தில் வைத்து இருந்தான். இருப்பினும் அந்த 60,000 பெண்கள் மூலம் அவனுக்குக் குழ்ந்தையே பிறக்கவில்லை. அதனால் தனது மனைவிகளாக இருந்த கைகேயி, கவுசல்யா, சுமுத்திரா ஆகியோரைப் பிராமணவர்களை யாகவேள்வி என்ற பெயரில் புணரவைத்துக் குழந்தைகளைப் பெறச்செய்தான். அப்படிப்பட்ட இராமன் இலக்குமணன் இருவரும் பீகார் நிலப்பகுதியில் இராவணன் சகோதரி தடாகையை விசுவாமித்திரன் என்ற முனிவன் வேண்டுகோளின்படி கொன்றான். பிறகு மிதிலை நகரில் இருந்த சனகன் மகளைத் திருமணம் செய்துக் கொண்டு அயோத்தியில் பல பெண்களோடு குடியும் கூத்துமாக வாழ்ந்து வந்தான்.

தசரதன் கைகேயியின் சூழ்ச்சியால் இராமனை நாட்டில் வாழ வேண்டாம் என்று கூறி மத்தியப்பிரதேசத்தில் இருந்த தண்டகார்ணயம் காட்டுப்பகுதியில் சென்று 14 ஆண்டுகள் வாழும்படிக் கூறுகிறான். அவனோடு பீகார் நாட்டில் பிறந்த கவுசல்யாவின் மகன் இலக்குமணனும் சீதையும் காட்டிற்கு வருகின்றனர். கைகேயியின் சூழ்ச்சியால் மனம்வருந்தி தசரதன் இறந்துவிடுகிறான். அதனை அறிந்த கைகேயியின் மகன் பரதன், இராமனை இன்றைய மத்தியப்பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியான தண்டகார்ணயத்தில் இருந்த சித்திரக்கூடம் என்ற இடத்தில் வந்து அழைத்ததும் அயோத்தி வர மறுத்துவிடுகிறான் இராமன்.

தந்தை விருப்பப்படி தண்டகார்ணயத்தில் வாழ்வதாகக் கூறி இராவணன் நாட்டு மக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினான். அவன் கொலைச் செயலுக்குத் தூண்டுகோலாக அகத்திய முனிவன் போன்றவர்களும் இரிழிகளும் உடன் இருந்து வந்தனர். அவர்களும் கருவிஉற்பத்திச்செய்தல், வில் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை இராமனுக்குக் கற்றுக் கொடுத்தனர். ஆரியர்கள் அரேபிய நாடுகளில் கற்றுவந்த வேதியியல், இயற்பியல் அவர்களின் படைக்கருவிகள் உற்பத்திக்குப் பெரும் உதவியாக இருந்தன.

வஞ்சகம், சூழ்ச்சி மூலம் மக்களைப் பிரித்து ஆளவும் ஆரியர்கள் முயன்று வெற்றி பெற்றனர். இராவணன் நாட்டு மக்களின் உண்மையான நாட்டுப்பற்றுடன் போராடி வந்தான். இராவணன் தன் நாட்டு வழக்கப்படி சைவ மதப்படி அந்திமக்காரியம் உட்பட பலவற்றைச் செய்துவந்தான். மேலும் ஆரியர்களின் கருத்துரையைக் குறிப்பாக யாகவேள்வியில் பலியிட, ஆடு, மாடுகளைக் கொன்று குவித்ததை எதிர்த்தான். அதனால் நேரிடையாகவும் மக்களின் மூலமும் ஆரியர்களை இராவணன் எதிர்த்துப் போரிட்டான். இந்த போர் ஏறத்தாழ 14 ஆண்டுகள் நடைப்பெற்றது.

இந்தப்போரில் முதலில் விசுவாமித்திரன் என்கிற முனிவனால் வில்வித்தை கற்றுக்கொடுக்கப்பட்டு, அதே முனிவனால் தூண்டப் பட்டு இராமன், இலக்குமணன் இருவரும் தடாகையைக் கொலை செய்கின்றனர், பிறகு விராடன் முதலான மக்கள் இன்றைய மத்தியப் பிரதேச வட மாநிலங்களான சித்தி, சாத்னா, பன்னா முதலிய மாவட்டங்களிலும் கொலை செய்யப்படுகின்றனர். அதன் பிறகு பல்வேறு முனிவர்களோடு, இன்றைய மத்தியப்பிரதேச தாமோ மாவட்டத்தில் வந்து தங்கிக் கொண்டு அகத்தியன் என்ற முனிவனின் ஆலோசனைப்படி ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட ஆண்டுகள் இராவணன் மக்களைக் கொன்றுக் குவித்தனர். இறுதியில் கரன், திரிசிரசு, துச்சணன் முதலானவர்கள் கொலைச் செய்யப்பட்டனர். இந்த இடத்தில் இருந்து சீதையை இராவணன் தூக்குச் சென்றான் என்று இராமாயணம் கூறுகிறது. இந்த இடத்தில் இருந்து போர் நடவடிக்கை ஏற்படுவதற்கான காரணமாகச் சீதை தூக்குச் செல்லப்பட்டதாகக் கூறிய கதை கற்பனையாக இருக்கிறது. இந்த வால்மீகி கதைப்படி இராவணன் நாட்டில் போர் நடந்த இடம் கிண்டோரியா,(பஞ்சவடி), நோக்டா(மாரீசன், இராவணன் சந்தித்த இடம்), சபேரா சமவெளி (பம்பா நதி, பம்பா ஏரி, இரிழிமுக மலை), சங்ககராம் சமவெளி(வாலியின் சிங்ககரம் மலைத்தொடர்ச்சி குகை, இராமன் தங்கி இருந்த தியோரி சிகரம், அதன் எதிரே அமைந்த போர்ப்படை பயிற்சி இடம், அதன் வடக்கில் அமைந்த மலைஇடை பள்ளம் ஆகிய கிந்கிந்தை, சிங்ககாரம்பூர் என்ற ஊர்), கைமூர் கணவாயின் தெற்கில் அமைந்த கட்டாங்கி என்ற ஊர், கட்டாஸ் கணவாய் என்ற மகேந்திர மலை அடிவாரத்தின் கையர் ஆறு, கட்டாங்கி ஊரின் கிழக்கில் அமைந்த விந்தியமலையின் தென்மேற்கு கோடி என்ற மலைத்தொடர்ச்சி, இந்திரானா என்ற இன்றைய ஊரினைச் சூழ்ந்த குன்றுகள் ஆகும்.

தனது சகோதரன் கரன் முதலானவர்களின் இறப்பினால் இராவணனின் படைப்பலம் மிகவும் பலகீனம் அடைந்தது. அதனால் இன்றைய நோக்டா நகரின் அருகில் அமைந்த பெரிமா ஆற்று அருகில் மாரீசனிடம் ஆலோசனை செய்து இராவணனோடு போரிட்டான். அப்படி போரிட்ட போதும் தோல்வி அடைந்தான். இதன்பிறகு இராமனின் மனைவியை இராவணன் தூக்கி வந்தான் என்று இராமன் செய்த கொலைச் செயலை மறைக்கும் நோக்கத்தோடு கதை புனைந்ததாக அமைகிறது.

அவன் தூக்கிச்சென்ற போது சடாயுவு என்ற மீனவன் தடுத்து நிறுத்திப் போரிட்டது போன்ற கதை புனைவில் கருடன் வந்து போரிட்டதாக வால்மீகி கூறியுள்ளான். தூக்கிச் சென்ற சீதையைச் சபேரா சமவெளியின் கிழக்கில் அமைந்த சிங்ககராம் என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த சுக்ரீவன் கவனித்தான் என்றும் அவன் சீதை போட்டுச் சென்ற சீலையை எடுத்து வைத்திருந்தான் என்றும் கதை கூறப்பட்டுள்ளது. சடாயுவு கருடன் என்ற மீனவன் தன் இறப்பிற்குரிய நிலையில் இராவணன் சீதையைத் தூக்கிச்சென்ற செய்தியை இராமனிடம் கூறி இறந்துவிடுகிறான். அதன் பிறகு அங்கு இருந்து தெற்கு நோக்கி பெரிமா ஆற்றுக்கரையிலும் அதனைச் சார்ந்த காடுகளிலும் சுற்றி வந்து தேடி காபந்தன் என்பவனோடு போரிட்டு அவனையும் கொல்கின்றனர். அவன் கூறியப்படி மாதங்கி வனம், சம்பாஆறு (பெரிமா ஆறு), பம்பா ஏரி, சிங்காகரம் வந்து சுக்ரீவனைச் சந்திக்கின்றனர். சுக்ரீவன் சீதை போட்டுச் சென்ற மேலாடையைக் காண்பிக்கின்றான். அதனால் இராமன் மக்கள் நெருக்கமான கென் ஆற்றுப்பகுதிகளான, கோதாவரி ஆறு, பம்பா ஆறு கடந்து மலைகள் சூழ்ந்த குறுகிய வழித்தடங்கள் மட்டும் உள்ள மக்கள் நெருக்கம் குறைந்த பகுதியின் வழியாகச் சீதைக் கடத்தப்பட்டாள் என்று அறிந்தான். இதனால் மலைவாழ் மக்களான சுக்ரீவன், அவன் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று போரிடும் சூழ்நிலையை இராமாயணம் கூறுகிறது. சுக்ரீவனின் அண்ணன் வாலியிடம் சுக்ரீவனுக்குப் பகை இருந்தது என்றும் அதனால் அவர்களிடையே பகையைப் பழிதீர்த்துக்கொள்ள இராமன் உதவி செய்தான் என்றும் இராமாயணம் கூறுகிறது. அவர்கள் இருவரும் போரிடும் போது இராமன் மறைந்து வில் அம்புவிட்டுக் கொன்றான் என்று இராமாயணம் கூறுகிறது.

பிறகு சுக்ரீவன் மக்களான அங்கதன், அனுமான் போன்றவர்கள் சீதை இருக்கும் இடம் தேடிச் செல்கின்றனர். இன்றைய கைமூர் கணவாயின் கிழக்கில் – கட்டாங்கி ஊரின் கிழக்கில் அமைந்த விந்திய மலைத்தொடர் தென்மேற்குக்கோடி மூலையில் சம்பாதி என்ற கருடன் என்ற மீனவன் அவர்களிடம் சீதையை இராவணன் வைத்திருக்கும் இடத்தை முதன்முதலில் தெரிவிக்கின்றான். சம்பாவதியின் மகன் சுபார்சனன் மகேந்திரமலை என்ற கட்டாஸ் கணவாய் என்ற வழியாகச் செல்லும் கையர் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது சீதையைத் தூக்கிச்சென்றதைப் பார்த்துத் தன்னிடம் கூறியதாகவும் கூறுகிறான்.

இராவணன் இருக்கும் இடம் விந்திய மலைத்தொடரின் தென்மேற்குக் கோடிமூலையில் இருந்து 100 யோசனை தொலைவு என்றும் அவன் கூறுகிறான். மகேந்திர மலையிலிருந்தும் இந்திரானா இலங்கைக்கு 100 யோசனை தூரம். அந்த 100 யோசனைதொலைவும் நீர் நிறைந்து சகதியுமாக நீந்தி செல்லும் நிலையில் இருந்தது. அதன் இடையே நடந்து செல்ல வழி இல்லை. கப்பலும் செல்லமுடியாது. அதனால் மழைக்காலத்தில் யாரும் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமான் தான் நீந்தி சென்று இராவணனின் நகரத்தில் சீதையைத் தேடினான். சீதையைப் பார்த்துவிட்டு இராமனிடம் கூறுகிறான்.

பிறகு தை மாதம் ஒரு முழுநிலவின்போது போர் தொடங்கியது. போரில் நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இராவணன் தனது பழங்குடி மக்களுக்காகப் போரிட்டு வீரமரணம் அடைந்தான். அவனது மறைவின் துயரத்தை அடுத்து அவனது மனைவி மண்டோதரியும் மாண்டாள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.