Saturday, January 28, 2012

157ஆண்டுகள் பழமையான ரெயில் எஞ்சின் இயக்கம்

AGE NO BAR: The EIR 21 steam locomotive being cheered during the heritage run to mark the Republic Day, in Chennai on Thursday. Photo: S.R. Raghunathan

பாரம்பரிய தினத்தை நினைவு கூறவும் , நீராவி எஞ்சின் ரெயிலைப் பற்றிப் பொது மக்கள் அறிந்து கொள்ளவும் குடியரசு தினத்தை ஒட்டியும் சென்னை எழும்பூரிலிருந்து கிண்டி வரை 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த இ.ஐ.ஆர் 21 என்ற நீராவி எஞ்சின் ரெயிலை தெற்கு ரெயில்வே இயக்கியது.

கடந்த 1855ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான இந்த ரயில் எஞ்சின், 130 குதிரைத்திறன் கொண்டது. 20 முதல் முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்திய ரெய்ல்வேக்கு 55 ஆண்டுகள சேவை செய்த பின்னர், கடந்த 1909 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று ஜமால்பூர் ரெய்ல்வே அருங்காட்சியகத்தில் இடம் பெற்றது. இந்த ரெயில் என்ஜின் மறு ஓட்டத்திற்காகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பூர் லோகோ பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டு அழகு படுத்தப் பட்டது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.