Saturday, January 21, 2012

ரூ.11,000 கோடி வருமானவரி செலுத்த வேண்டாம்: வோடஃபோன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுதில்லி,ஜன.20: வோடஃபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.11,000 கோடி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

ரூ.11,000 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

3 நீதிபதிகள் பெஞ்ச்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திர குமார் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

அபிஷேக் மனு சிங்வி: வோடஃபோன் நிறுவனம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

வெளிநாட்டில் நடந்த பரிமாற்றம்:வெளிநாட்டில் நடந்த வர்த்தகப் பரிமாற்றம் மீது நிர்வாக அதிகாரம் செலுத்தும் உரிமை நமக்கு இல்லை என்பதால் இந்திய வருமானவரிச் சட்டப்படி வரிப் பிடித்தம் செய்யத் தவறியது ஏன் என்று கேட்டு அந்த நிறுவனத்திடம் வசூலிக்க முடியாது என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது.

ரூ.11,000 கோடி திரும்ப ஒப்படைப்பு: இந்த வழக்கை நடத்துவதற்கு முன்னால் விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி வோடஃபோன் நிறுவனம் செலுத்திய ரூ. 2,500 கோடியை 2 மாதங்களுக்குள்ளாக 4% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது. உத்தரவாதத் தொகையாக அந்த நிறுவனம் செலுத்திய ரூ.8,500 கோடியை 4 வாரங்களுக்குள் அந்த நிறுவனத்திடமே திருப்பித்தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்துக்கும் உத்தரவிடப்பட்டது.

வோடஃபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு மே மாதம் ஹட்சிசன் - எஸ்ஸார் குழுமத்தின் 67% பங்குகளை சுமார் ரூ.56,000 கோடி கொடுத்து வாங்கியது. இந்த நடவடிக்கையை ஒட்டியே அந்த நிறுவனம் அதனுடைய ஊழியர்களுக்கு அளித்த ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திருக்க வேண்டிய ரூ.11,000 கோடியைத் தர வேண்டும் என்று இந்திய வருமானவரித்துறை வழக்கு தொடுத்தது.

பல கட்டங்களுக்குப் பிறகு இப்போது இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரணாப் அவசர ஆலோசனை: நிதி நெருக்கடி கடுமையாக இருக்கும் இந்த வேளையில், வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்க வேண்டிய பெருந்தொகை கையைவிட்டுப் போகிறதே என்ற கவலையில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்துடன் தில்லியில் சனிக்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. அப்போது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

நிருபர்களைச் சந்தித்த சல்மான் குர்ஷீத் இந்த வழக்கின் தீர்ப்பை ஆழ்ந்து படித்துப் பார்த்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

வோடஃபோன் மகிழ்ச்சி: இந்தத் தீர்ப்பினால் வோடஃபோன் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு நம்பிக்கையை அளிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்வி பாராட்டு: இந்திய நீதிமுறை நடுநிலையானது, திறமை மிக்கது என்பது மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டிருக்கிறது என்று அபிஷேக் மனு சிங்வி பாராட்டு தெரிவித்தார்.

1 comments:

  1. [MinTamil] ரூ.11,000 கோடி வருமானவரி செலுத்த வேண்டாம்: வோடஃபோன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
    Collapse
    13 hrs ago
    me
    Show details
    to mintamil

    புதுதில்லி,ஜன.20: வோடஃபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.11,000
    கோடி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம்
    வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
    ரூ.11,000 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம்
    தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம்
    தள்ளுபடி செய்தது.
    3 நீதிபதிகள் பெஞ்ச்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா,
    நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திர குமார் அடங்கிய பெஞ்ச் இந்த
    வழக்கை விசாரித்தது.
    அபிஷேக் மனு சிங்வி: வோடஃபோன் நிறுவனம் சார்பில் காங்கிரஸ் கட்சியின்
    பத்திரிகைத் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி
    ஆஜரானார்.
    வெளிநாட்டில் நடந்த பரிமாற்றம்:வெளிநாட்டில் நடந்த வர்த்தகப் பரிமாற்றம்
    மீது நிர்வாக அதிகாரம் செலுத்தும் உரிமை நமக்கு இல்லை என்பதால் இந்திய
    வருமானவரிச் சட்டப்படி வரிப் பிடித்தம் செய்யத் தவறியது ஏன் என்று கேட்டு
    அந்த நிறுவனத்திடம் வசூலிக்க முடியாது என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது.
    ரூ.11,000 கோடி திரும்ப ஒப்படைப்பு: இந்த வழக்கை நடத்துவதற்கு முன்னால்
    விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி வோடஃபோன் நிறுவனம் செலுத்திய ரூ. 2,500
    கோடியை 2 மாதங்களுக்குள்ளாக 4% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும்
    பெஞ்ச் உத்தரவிட்டது. உத்தரவாதத் தொகையாக அந்த நிறுவனம் செலுத்திய ரூ.
    8,500 கோடியை 4 வாரங்களுக்குள் அந்த நிறுவனத்திடமே திருப்பித்தர வேண்டும்
    என்று உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
    வோடஃபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு மே மாதம் ஹட்சிசன் - எஸ்ஸார்
    குழுமத்தின் 67% பங்குகளை சுமார் ரூ.56,000 கோடி கொடுத்து வாங்கியது.
    இந்த நடவடிக்கையை ஒட்டியே அந்த நிறுவனம் அதனுடைய ஊழியர்களுக்கு அளித்த
    ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திருக்க வேண்டிய ரூ.11,000 கோடியைத் தர
    வேண்டும் என்று இந்திய வருமானவரித்துறை வழக்கு தொடுத்தது.
    பல கட்டங்களுக்குப் பிறகு இப்போது இறுதித் தீர்ப்பு
    அளிக்கப்பட்டிருக்கிறது.
    பிரணாப் அவசர ஆலோசனை: நிதி நெருக்கடி கடுமையாக இருக்கும் இந்த வேளையில்,
    வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்க வேண்டிய பெருந்தொகை கையைவிட்டுப்
    போகிறதே என்ற கவலையில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்துடன்
    தில்லியில் சனிக்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் நிதியமைச்சர்
    பிரணாப் முகர்ஜி. அப்போது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
    நிருபர்களைச் சந்தித்த சல்மான் குர்ஷீத் இந்த வழக்கின் தீர்ப்பை ஆழ்ந்து
    படித்துப் பார்த்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.
    வோடஃபோன் மகிழ்ச்சி: இந்தத் தீர்ப்பினால் வோடஃபோன் நிறுவனம் மகிழ்ச்சி
    அடைந்திருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு
    நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு நம்பிக்கையை அளிக்கும் என்று தொழில்துறை
    வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சிங்வி பாராட்டு: இந்திய நீதிமுறை நடுநிலையானது, திறமை மிக்கது என்பது
    மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டிருக்கிறது என்று அபிஷேக் மனு சிங்வி
    பாராட்டு தெரிவித்தார்.
    You might also like:

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    Reply Reply to all Forward
    4 hrs ago
    செல்வன்
    Show details
    to mintamil


    2012/1/24 சீராசை சேதுபாலா
    சிங்வி பாராட்டு: இந்திய நீதிமுறை நடுநிலையானது, திறமை மிக்கது என்பது
    மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டிருக்கிறது என்று அபிஷேக் மனு சிங்வி
    பாராட்டு தெரிவித்தார்.


    வோடபோன் நிறுவனத்துக்கும், இந்திய நீதிதுறைக்கும் பாராட்டுக்கள்.

    11,000 கோடியை நாசிக்கில் பத்து நிமிடத்தில் ப்ரிண்ட் அடித்து கொடுத்துடுவார் பிரனாப் முகர்ஜி.அரசுக்காவது நஷ்டமாவது?

    --
    செல்வன்

    "மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்

    ReplyDelete

Kindly post a comment.