Tuesday, November 15, 2011

நம் இன்றையப் புகைப்படத்தைப் பழைய காலத்தில் எடுத்த புகைப்படம் போல் எளிதாக மாற்றலாம்.





வின்மணி சிந்தனை 
திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பை இறைவன்
ஏதாவது
ஒரு வழியில் கொடுப்பான்.

சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தேதி : நவம்பர் 5,1870
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்.
இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர்,
1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில்
அரவிந்தருக்கு ஆதரவாக வாதாடி வென்றவர்..
மோதிலால் நேருவுடன் இணைந்து
சுயாட்சிக்
கட்சியை ஆரம்பித்தவர்.


http://winmani.wordpress.com/2011/11/05/old-photo/

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலேசான இளம் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம், அந்த காலத்துப் புகைப்படங்கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லும் .

நாம் இப்போது எடுத்த புகைப்படத்தைக் கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.


தொழில்நுட்ப மாற்றங்கள் நாளும் பெருகி வரும் வேலையில் ஆன்லைன் மூலம் சில நொடிகளில் பல வித்தைகள் செய்யலாம் அந்த வகையில் எந்த மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களை பழையாகாலத்தில் எடுத்த புகைப்படம் போல் மாற்றலாம் நமக்கு உதவ ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.youroldpic.com

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்பதை சொடுக்கி பதிவேற்றம் செய்ய வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்த புகைப்படம் பழைய காலத்து புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கும்.மாற்றப்பட்ட இந்த புகைப்படதின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணினியில் சேமித்தும் வைக்கலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை, இன்று எடுத்த புகைப்படத்தை கூட அந்த காலத்தில் எடுத்த புகைப்படமாக மாற்ற விரும்பும் புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.