Friday, November 25, 2011

கோச்சடையன் என்ற பெயர்தான் சரியான தமிழ்!

ஆங்கிலத்தில் சிந்த்திதுத் தமிழில் எழுதவோ அல்லது பேசவோ செய்கின்ற காலக் கட்டத்தில் வாழ்கின்ற காரணத்தால் ஒரு தவறு நேர்ந்துவிட்டது.

ரணதீரன் என்ற பெயரிலேயே விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்ததால் ஆங்கில விக்கிபீடியாவை அடிப்படையாகக் கொண்டு கோச்சடையான் என்ற பெயர் பரவிவிட்டது.

ரணதீரன் கோச்சடையன் என்று அழைப்பதே சரி. திரைத்துறையினர் அவர்கள் ராசிக்கு ஒற்றெழுத்தை விட்டு விடுவார்கள். தேவை இல்லாத இடத்தில் சேர்த்துக் கொள்வார்கள். எப்படியோ ஏழாவது அறிவுக்குச் சமமாகவோ அல்லது அதைவிட ஒருபடி மேலாகவோ ஒரு படம் தந்தாகவேண்டும். சிலர் முருகர் பெயர் சம்பந்தப்பட்டுப் படம் தரும்பொழுது, சிவன் பெயரிலாவது தருவோமே என்ற தாராள மனது.

சினிமாகாரர் நினைத்தால் சாதாரணப்பெயரும் முக்கியத்துவம் பெறும். அருணாசலம், பாபா, படையப்பா.....வரிசையில் கோச்சடையன்.

ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரி">அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனை உடையவன் எனப்படுகிறான்.

ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான்.

இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேரநாட்டை வென்றான். பின்னர் சோழநாடு, கொங்கு நாடு வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும், மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான்.

சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டு ம், கூறுவது குறிப்பிடத்தக்கது.

ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).

இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.