Saturday, November 26, 2011

அமெரிக்க மியூசியத்தில் ஐன்ஸ்டீனின் மூளை பொதுமக்களின் பார்வைக்காக !!



மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை அமெரிக்க மியூசியத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈடு இணையற்ற விஞ்ஞானியாக போற்றப்பட்ட ஐன்ஸ்டீன் மூளையை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர்.

ஐன்ஸ்டீன் கணித திறமைகள் கொண்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானி. இவர் புள்ளியில் பொறிமுறை மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளில் தனது பங்களிப்பை செய்துள்ளார். இவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆவார். இவருக்கு 1921 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஐன்ஸ்டீன் தனது 76 வது வயதில் மரணமடைந்தார். அவரது அறிவுமிக்க மூளையை யாருக்கும் தெரியாமல் தாமஸ் ஹார்வே என்ற டாக்டர் எடுத்து வைத்துக் கொண்டாராம். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் ஹார்வே மீது வழக்கு தொடுத்தனர்.

ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதியளித்ததாக கூறினார். இந்த நிலையில் அவருடைய மூளை நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை லென்சு மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.