Saturday, November 26, 2011

கோவில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?

எஸ். நடராசன் என்பவர் எழுதிய ஆலயங்களும் ஆகமங்களும் என்கிற நூலில் பக்கம் 38-ல் பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன? என்று சில காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  1. கோயிலின் விமானம் மற்றும் கோபுரம் ஆகிய பகுதியில் திருஷ்டிபடாமலிருப்பதற்காக அமைக்கப்படுகின்றன.
  2. கோயில்களில் இடம் பெறும் சிற்பங்கள் பெரும்பாலும் புராண, இதிகாசச் சிற்பங்கள் மற்றும் மனித வாழ்வில் நிகழக்கூடிய இயற்கையான நிகழ்வுகளும் என்பதால். மனித வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கும் பாலியலைத் தவறாகவோ புனிதமற்றதென்றோ கருத வேண்டியதில்லை. எனவே இத்தகு பாலியல் சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
  3. ஆகமங்களில் இத்தகு பாலியல் சிற்பங்களைக் கோபுரம் மற்றும் விமானங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் இவை கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
  4. மனிதன் கோயிலுக்குள் செல்லும் பொழுது மனத்தைக் கண்டபடி ஓடவிடாது அடக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகு பாலியல் சிற்பங்கள் கோயில்களில் இடம் பெறுகின்றன.

பிற காரணங்கள்

  • மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
  • இந்து சமயம் சார்ந்த சில புராணங்கள் கூட இந்தப் பாலியல் தொடர்புடையதாக உள்ளன. உதாரணமாக “யோனி வணக்கம்” (Yoni cult) பழங்காலம் முதல் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழிபாடு மக்கள் தொகைப் பெருக்கம் அல்லது மனிதன் பிறந்து வந்த வழியை நினைத்து நன்றி கூறுவதற்காக என்று தொடங்கியிருக்கலாம்.
  • கோயில்களில் இடம் பெறும் பாலியல் தொடர்பான சிற்பங்கள் அழகுணர்ச்சியைத் தூண்டும்படியாக அமையாமல் அருவருக்கத்தக்க வகையிலேயும் அமைந்துள்ளன. இவற்றை இடம் பெறச் செய்தது அரசன் என்பதை விட சிற்பியின் படைப்பாற்றலுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது பாலியல் சிற்பங்களை அமைக்கும் சிற்பியின் மிஞ்சிய பாலியல் உணர்வுகளுக்கான வடிகாலாக இருக்கலாம்.
  • குழந்தை வரம் வேண்டிக் கோயிலுக்குச் செல்லும் தம்பதியினருக்கு இத்தகு சிற்பங்கள் தாம்பத்யத்திற்கு ஒரு தூண்டுகோலாகவும் அமையுமென்பதால் இத்தகு சிற்பங்கள் இடம் பெற்றிருக்கும்.
  • பாலியல் தொடர்பான செய்திகளை மக்கள் தெளிவாக அறிந்து அதன்படி இன்பமடைய பிற தகவல் தொடர்புச் சாதனங்களோ இல்லை என்பதால் மக்களுக்கு பாலியல் தொடர்பான அறிவை புகட்ட கஜீராஹோ பகுதியில் உள்ள பல கோயில்களில் இத்தகு பாலியல் சிற்பங்கள் பெருமளவில் இடம் பெற்றிருந்தன.

பாலியல் சிற்பங்கள் தொடர்பான நூல்கள்

  • Rhys, Brian Fouchetmax-pol என்பவர் எழுதிய "Erotic Sculpture in India" நூல்
  • Prakash Vidya என்பவர் எழுதிய "A Study of Cultural Conditions of Chandela Society" நூல்

0 comments:

Post a Comment

Kindly post a comment.