Friday, November 4, 2011

சுஜிதாவிற்கு இந்தியாவில் முதலிடம்! உலகில் மூன்றாம் இடம்!

உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான கோபி பாலைவனத்தை சுஜிதா என்ற 33வயதுடைய இந்தியப் பெண்மணி கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் புனேயையைச் சேர்ந்தவர்.

மங்கோலியாவின் தெற்குப் பகுதியில் காணப்படுவது கோபி பாலைவனம். உலகில் உள்ள பெரிய பாலைவனங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

13பேர் கொண்ட குழுவினருடன்1623 கிலோ மீட்டர் பயணித்து இந்த பாலைவனத்தைக் கடந்த மூன்றாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சுஜிதா கூறும்போது கோபி பாலைவனம் இரவில் அதிகபட்சக் குளிரையும், பகலில் அதிக பட்ச வெயிலையும் கொண்டிருந்தது. இதனைக் கடப்பது பெருஞ் சவாலாகத்தான் இருந்தது. இதனை நிறைவேற்றியதன் மூலம், மற்ற எந்த வேலையையும் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு25 முதல்32 கிலோ மீட்டர் வரை நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் கோபிப்பாலைவனத்தைல் கடந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளா. உலக அளவில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்கள் கோபி பாலைவனத்தைக் கடந்துள்ளனர். எனவே, சுஜிதா உலக அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.