Thursday, November 3, 2011

தாவர எண்ணெயில் பறந்த விமானம்!



747பயணிகளை ஏற்றிக்கொண்ட சீன விமானம் பெய்ஜிங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விண்ணில் பறந்தது. அதன் பறக்கும் சக்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது, இதில் என்ன சிறப்பு? பறக்கப் பயன்படுத்திய எரிபொருள் பெட்ரோல் அல்ல.

புதர்களில் வளரும் ஜட்ரோபோ செடிவகைகளில் கிடைக்கும் விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட தாவர எரிபொருளைக் கொண்டு மேற்படி விமானம் பறந்தது. தயாரிப்புச் செலவு அதிகம். தண்ணீரும் அதிகம் தேவைப்படுகின்றது. இந்த்த ஆய்வில் அமெரிக்காவையும் சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.


தாவர எரிபொருளை போயிங் விமானங்களுக்குப் பயன்படுத்துவது ஒன்றும் புதியது அல்ல. பல ஐரோப்பிய விமானங்கள்- கே. எல். எம், ராயல் டச் ஏர்லன்ஸ் அவற்றுள் சில.

"எனினும், தாவர எரிபொருளில் விமானைத்தை இயக்கியது சீன விமானத் துறையில் ஒரு புதிய சாதனை. இன்னும் சில ஆண்டுகளில் தாவர எரிபொருள் பயன் பாட்டுக்கு வரும். (சுமார் நான்கு ஆண்டுகளில்) சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க முடியும். " என்பது ஏர் சீனாவின் துணைத் தலைவர் தரும் தவல் இது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.