கொலைசெய்யப்பட்ட 21வயது தத்தா-அஸ்ஸாம்-பி.இமெக்கானிக்கல் 2ம் ஆண்டு
சிதம்பரத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் அசாமை சேர்ந்த துருபஜோதி தத்தா (வயது 21) பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த ராஜேஷ் ரோஷன் (19), அங்கித் குமார் (19) ஆகியோரும் படித்து வந்தனர்.
அவர்கள் 3 பேரும் நண்பர்கள். துருபஜோதி தத்தா, அங்கித்குமார் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். ராஜேஷ் ரோஷன் இன்னொரு வீட்டில் நண்பருடன் தங்கி இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் போதை பழக்கம் இருந்து வந்தது. பேப்பரில் எழுத்தை அழிக்க உதவும் ஒயிட்னரை போதை மருந்தாக மாற்றி அதை பயன்படுத்தி வந்தனர். நேற்று இரவு துருபஜோதி தத்தா வீட்டுக்கு ராஜேஷ் ரோஷன் வந்தார். 3 பேரும் போதை மருந்தை பயன்படுத்தினார்கள்.
அப்போது ராஜேஷ் ரோசன் போதை அதிகமாகி தகராறில் ஈடுபட்டார். இதனால் துருபஜோதி தத்தா, அங்கித்குமார் இருவரும் ராஜேஷ்ரோசனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டினார்கள். இன்று அதிகாலை 4 மணிக்கு ரோஜேஷ்ரோசன் மீண்டும் அங்கு வந்தார். வீட்டு கதவை எட்டி உதைத்து தகராறு செய்தார். இதனால் கோபம் அடைந்த துருபஜோதி தத்தா மரக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் ராஜேஷ்ரோசன் அந்த மரக்கட்டையை பறித்து துருபஜோதி தத்தாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துருபஜோதி கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திர் ஓடிவந்தனர். அவர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் ரோஷனை பிடித்து விசாரித்து வருகின்றனர். அங்கித்குமாரிடமும் விசாரணை நடக்கிறது. இன்று காலை வரையில் ராஜேஷ்ரோசன் போதை மருந்து மயக்கம் தெளியாமலேயே உளறியபடி இருந்தார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.