Thursday, October 27, 2011

போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா.சபை உதவ வேண்டும் அவுஸ்திரேலியா வலியுறுத்தல்






இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது மேற் கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக் குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இப் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சூடான விவாதம் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கெவின் ரூட் நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இப் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான உரிய பொறிமுறைகளை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற் கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கையில் கவனம் கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் 2013 -ம் ஆண்டு நடை பெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து உறுப்பு நாடுகள் சுயமாக முடிபெடுக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையின் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் பொது நலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் உறுப்பு நாடுகள் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.