Friday, October 28, 2011

உலகில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட முதல் விமானம்

[இளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை துவக்கியது. இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது எடை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்களை விட எரிபொருள் செலவு குறையும்.. பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகலமான இருக்கைகளையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

http://puthiyaulakam.com/?p=3395


 பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் விமானம்( படங்கள் இணைப்பு)

இந்நிலையில் டோக்கியோவிலிருந்து ஹாங்காங்கிற்கு கன்னிப்பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் 200 விமான நிபுணர்களும் ஆர்வலர்களும் பயணித்தனர். மேற்படி விமானத்தின் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைகளுக்கிடையேயான நீளம் 197 அடியும் ஆகும். அத்துடன் இந்த விமானம் மணிக்கு சுமார் 650 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. பயணிகள் மற்றும் சரக்குகள் உட்பட 502, 500 ராத்தல் நிறையுடைய இந்த விமானத்தின் விலை 193.5 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

2 comments:

  1. எல்லாம் பிளாஸ்டிக்கில் இருப்பதால் காற்றின உராய்வில் சீக்கிரம் தேய்ந்து விடாதா...

    ReplyDelete
  2. நண்பர் சண்முகம் அவர்களே! புதுமையான தகவல் ஆதலால் பதிவு செய்தேன்.200 விமான ஆர்வலர்களும் நிபுணர்களும் முதலில் பயணத்துள்ளனர். அவர்கள் அனுபவங்கள் வெளிப்படும். பயன் படுத்தும் காலம் கூறபடவில்லை. தஙகள் கேள்விக்குப் பதில் கிடைத்தவுடன் இதே இடத்தில் பதிவு செய்வேன் puthiyaulakam.com புதிய செய்திகள் பல கிடைக்கும்.

    ReplyDelete

Kindly post a comment.