Saturday, October 29, 2011

இந்தியாவில்லேயே முதல்முறையாகபெங்களூருவில் டிராவலேட்டர் சேவை

பெங்களூருவை கலக்கப் போகும் டிராவலேட்டர்


பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில், ரூ. 600 கோடி மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் சேவையை அனுபவித்து வரும் பெங்களுருவாசிகளுக்கு மற்றொரு இனிய அம்சமாக,இந்தியாவில்லேயே முதல்முறையாக டிராவலேட்டர் சேவையை மிக விரைவில் பெற உள்ளனர்.

பையபனஹள்ளி மெட்ரோ ரயில் ஸ்டேசனில் உள்ள லைப்ஸ்டைல் சென்டரில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமே, இந்த டிராவலேட்டர் சேவையையும் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பையபனஹள்ளி மெட்ரோ ரயில் லைப்ஸ்டைல் சென்டருக்கு அடுத்தபடியாக, பிஎம்ஆர்சிஎல், டில்லியில் உள்ள இந்தியா ஹேபிடட் சென்டரில் டிராவலேட்டர் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

பையபனஹள்ளி மெட்ரோ ரயில் ஸ்டேசனில் அமைக்கப்பட உள்ள இந்த டிராவலேட்டர் சேவையின் மூலம், ரயில் ஸ்டேசனையும், அருகிலுள்ள லைப்ஸ்டைல் சென்டருக்கும் எளிதாக சென்று வரலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.