தமிழகத்தில் நம்பிக்கை ஸ்தாபனமாகவும், எதையும் நம்பாமல் தன் அறிவை மட்டுமே மூலதனமாக கொண்டு தன் வாழ்வை உயர்த்திக்கொள்ளும் எண்ணம் கொண்ட ஒரு தேர்வாக நம்பிக்கையில் இருந்து வந்தது தமிழக அரசுப் பணி தேர்வாணையம் . இந்த அமைப்பின் கீழ் பணியாளர் நியமனத்தில் லஞ்சம் வாங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து இந்த ஆணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் 12 பேர் வீடுகளில் காலையில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு படை போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆணையம் 1923 முதல் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கமிஷன் மூலம் குரூப்- 1 . குரூப்- 2 , குரூப் - 3 , குரூப்- 4 என அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆணையத்தின் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., செயலர்கள் என 13 பேர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது. எம்.ராமசாமி, டி.சங்கரலிங்கம், கே.லட்சுமணன், எம்.÷ஷாபியான், எஸ்.சேவியர்ராஜா, கே.எம்,ரவி, ஜி.சண்முகமுருகன், கே.கே.,ராஜா, எஸ்.பன்னீர்செல்வம், ரத்னாசபாபதி, பி.பெருமாள்சாமி, டி.குப்புச்சாமி, செல்வமணி, உதயச்சந்திரன், அனில்மகேஸ்ரம் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது.
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தான், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். டி.என்.பி.எஸ்.சி., பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று அதிகார வட்டம் தெரிவிக்கின்றது.
" டி.என்.பி.எஸ்.சி., பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று அதிகார வட்டம் தெரிவிக்கின்றது."
ReplyDeleteதகவலுக்கு நன்றி.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com