Sunday, October 30, 2011

சமண மதத் துறவிகளாகும் 6 இளைஞர்கள்






சமண மதத் துறவிகளாகவுள்ள (இடமிருந்து) பாயல் காதியா, பூர்வி சிப்பட், ஜெயஸ்ரீ பாராக், ஹர்ஷித் சிப்பட், சுபாஹூ துக்கட், ககன்துக்கட்.


இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட ஆறு இளைஞர்கள் சமண மதத் துறவியாகின்றனர். இவர்களுக்கு சாதுமார்கி ஜெயின் சங்கத்தின் 1008-வது ஆச்சாரியார் ஸ்ரீ ராமலால்ஜி "ஜெயின் பகவதி தீட்சை' வழங்குகிறார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்ரீ சாதுமார்கி ஜெயின் சங்கத்தின் நிறுவனர் எஸ்.டி.உகம்சந்த் கூறியது: ஆச்சாரியார் ஸ்ரீ ராமலால்ஜி சென்னை வேப்பேரியில் ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் தங்கி உள்ளார். அவர் தன்னுடைய சீடர்களுடன் கடுமையான விரதங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் தன்னுடைய சீடர்களில் ஆறு பேரைத் தேர்வு செய்து அக்டோபர் 31-ம் தேதி தீட்சை வழங்குகிறார்.

தீட்சை பெறுபவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சிறு வயதிலிருந்தே சமண மதத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டவர்கள். இவர்கள் இல்லற வாழ்வைத் துறந்து பற்று அற்ற வாழ்க்கையை வாழவும், தங்களின் கர்மவினை தீர்க்கவும் தங்களை சிஷ்யர்களாக ஆக தீட்சை பெறுகின்றனர்.

சமண மதத் துறவியாகும் இவர்கள் வெள்ளை நிறத்திலான பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும், எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது, குடும்பத்தாருடன் எந்த உறவுகளும் இருக்கக்கூடாது, தங்களின் உணவுகளைப் பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டும் ஆகியவை இதில் இருக்கும் முக்கிய கட்டளைகள் ஆகும்.

இவர்களுக்கு மட்டும் இந்த வாழ்க்கை முறை எபடி சாத்தியமாகின்றது?

2 comments:

  1. அது அவிங்க விதி...

    ReplyDelete
  2. விதி என்று சொல்வது உங்களது இளமைத் துடிப்பு. இல்லாமையால் மேற்கொண்ட துறவல்ல அது. விரும்பி ஏற்றுகொண்ட செயல். “ அது அவர்கள் விதி “ என்று கூடத் தாங்கள் எழுதலாம்.

    ReplyDelete

Kindly post a comment.