Sunday, October 30, 2011

நீரிழிவின் தலைநகரம் இந்தியா-3000கி.மீ.டாக்டர் சைக்கிளில் பயணம்!

அப்பாவும் அம்மாவும் ஐ.ஏ.எஸ். பிறந்தது மும்பையில். மருத்தவப்படிப்பு சென்னையில். அதிக நாட்கள் செலவிட்டது தில்லியில். பிரிட்டனில் மருத்துவேலை. இங்கிலாந்தில் பணியாற்றிய டாக்டர் சேஷகிரியுடன் திருமணம். இல்லறமாம் நல்லறத்தில் பூத்த இரு மலர்கள் .ஈஸ்வர் என்றொரு மகன். பூமி என்றொரு மகள்.


இருவருமே மருத்துவர்கள். சமூகத்திலிருந்து பெற்றதைச் சமூகத்திற்கே கொஞ்சமாவது திரும்பக் கொடு என்பதைக் கொள்கையாகக் கொண்ட மனம் ஒத்த தம்பதிகள். 2008ல் பிறக்கிறது சஞ்சீவினி என்றதொரு அறம். இதற்கு அப்பா பி.ஆர்.வி. ரமணன் அவர்களே கிரியாஊக்கி என்கின்றார் டாக்டர் சேஷாத்திரியைக் கரம் பிடித்த டாக்டர் ரம்யா . சென்னை அரசு மருத்துமனை சிறுநீரகவியல்துறை தலைவர் டாக்டர் ஜெயகுமார், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக் புலிகால் ஆகியோரும் துணை நிற்கின்றனர்.


சென்னையிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்டிகாவனூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முகாம்கள் நடத்துகின்றோம். இதற்கு ஆங்குள்ள டாக்டர் பலராமனும், உள்ளூர்த் தலைவர் கே.நரசிம்மனும் உறுதுணையாக உள்ளனர்.


ரத்த அழுத்தம், உடல்பருமன், கார்போஹடிரேட்/ கொழுப்பு இவற்றால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், சிறு நீரகச் செயலிழப்பு, நீரிழிவுச் சிக்கல்கள் இது போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கு, சிகிச்சை அளிப்பதும், இவை வராமல் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு சஞ்சீவினி செயல்பட்டு வருகின்றது.


இந்தியாவில் காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை விழிப்புணர்வுப் பரப்புரையை மூவாயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தின் மூலம் டாக்டர் டி.வி.சேஷகிரி மேற்கொண்டுள்ளார். காஷ்மீரில் செப்டம்பர் 26ல் துவங்கியது’ அக்டோபர்31ல் கன்யாகுமரியில் முடியும்.


ஜம்மு, அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, அம்பாலா,டெல்லி, ஜான்சி, குவாலியர், ஹைதராபாத், கர்நூல், பெங்களுரு என பயணம் தொடர்ந்தது. நடிகர் விக்ரம் நேரில் பங்கேற்று வாழ்த்தினார். மதுரையில் அரவிந்தர் கண் மருத்துவமனை நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.


அரசாங்கம் செய்யவேண்டியதைத் தொண்டு நிறுவனங்கள் சில சிறப்பாகச் செய்து வருகின்றன. அவற்றுள் சஞ்சீவினி மிகச்சிறப்பானதென்றே தெரிய வருகின்றது. சிறப்பு நிதிக்காக வெளிநாடுகளில் சைக்கிள் பயணங்களையும், கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தியுள்ளனர். இந்தியாவில் வெறும் பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கேட்காவிட்டாலும் கொடுப்பது நமது கடமை.


எல்லாவற்றிற்கும் மேலாக அவரவர் வாழும் பகுதிகளில் சஞ்சீவினியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதையே அவர்கள் மிகவும் விரும்புகின்றனர்.


www.naarisakhi.com/ ஆங்கில இணைய இதழுக்கு, சஞ்சீவினி ஒருங்கிணைபாளராக, டாக்டர்.ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டி, மற்றும் பத்திரிக்கை செய்திகளிலிருந்து நன்றியுடன், பதிவர்.







Dr.Ramya Ramanan
Administrator
Sanjeevini Trust
2223, 24th cross
4th main. Banashankari 2nd stage.
Bangalore - 560 070
India
Phone : +91-9448763222



Dr T.V.Seshagiri
Trustee
Sanjeevini Trust
3 Canterbury Drive,
Rugeley, Staffordshire
WS15 1GH
United Kingdom
Phone : +44-7910371983



Dr Ashok Puligari
Overseas Administrator and Fund Raiser
Sanjeevini Trust
23 Crabtree Road
Walsall, West Midlands
WS1 2RY
United Kingdom
Phone : +44-7713033132



Registered Address
Sanjeevini Trust
17 (Old No 36) G.S. Colony
Cenotaph 1st Lane
Teynampet
Chennai 600 018
India


Email : contact@sanjeevinitrust.coம்

2 comments:

  1. மருத்துவர்களின் சேவை.
    தயவு செய்து படித்துப் பாருங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் ரத்தினவேல் சார். அற்புதமான சேவை..வணங்கப் பட வேண்டிய உயிர்கள்..!

    ReplyDelete

Kindly post a comment.