இது கி.பி., 7ம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஞானசம்பந்தரால், பாடல் பெற்ற தலம். இக்கோவிலின் புனருத்தாரண பணி, இந்திய தொல்பொருள் துறை மற்றும் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியால் இணைந்து நடத்தப்படுவதாக, இலங்கையில் உள்ள இந்திய ஐகமிஷன் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையேயான ஒப்பந்தங்களின்படி, இக்கோவில் பணிக்கு இந்திய அரசு, 32 கோடியே, 60 லட்சம் இலங்கை ரூபாய் அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியில், இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காக, இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களில் இதுவும் ஒன்று என, இந்திய ஐகமிஷன் தெரிவித்துள்ளது.
http://tamilcnn.com/
0 comments:
Post a Comment
Kindly post a comment.