Wednesday, October 19, 2011

முள்ளிவாய்க்காலில் நின்ற நேரடிச் சாட்சி மீனா: அவுஸ்திரேலியாவில் மகிந்தர் கைதாவாரா ? 19 October, 2011 by admin




இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது. சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் ஆடிப்போயுள்ளனர். மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி இலங்கை இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கடலில் நின்ற இலங்கைக் கடற்படையினர் தம் மீது தாக்குதல் நடத்தியது தொடக்கம் இவர் விவரித்துள்ளர்.

இலங்கையின் முன்நாள் கடற்படை தளபதி தற்போது அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக இருக்கிறார். இவருக்கு எதிராகவும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித கோகன்னவுக்கும் எதிராகவும் மற்றும் தற்சமயம் அவுஸ்திரேலியா செல்லவிருக்கும் மகிந்தருக்கு எதிராகவும் அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிசார் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது இலங்கைக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாது அவர் கொடுத்த முறைப்பாட்டை விசாரிக்கவும் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவுஸ்திரேலியாவின் தேசிய தொலைக்காட்சி 9 நிமிட நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளது. அதில் போர் குற்றத்துக்காக இலங்கையின் ஜனாதிபதி மகிந்தரை விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மகிந்தர் விரைவில் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். இந் நிலையில் மீனா கிருஷ்னமூர்த்தி அவர்கள் ஒரு தனியாளாக அதுவும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு நடைபெற்ற கொலைகளுக்கு நீதிவேண்டும் என பாடுபடுகிறார். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருக்கு இதுவரை உதவ எவரும் முன்வரவில்லை. சிறிய உதவிகளே கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வைத்தே அவர் இவ்வளவு தூரம் நகர்ந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் அதிகம் இல்லை என்ற காரணமும் இதில் அடங்கும். ஒரு பெண்ணாக இருந்து தன்னலம் பாராது இவர் துணிச்சலுடன் செயல்படுகின்றமைக்கு அதிர்வு தலைவணங்குகிறது. அத்தோடு ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் இப் பெண்ணுக்கு தம்மாலான எல்லா உதவிகளையும் செய்யவேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கிறோம். இலங்கை கடற்படையினர் தாக்குதலில் யாராவது இறந்திருந்தால் அவர்களின் உறவுகள் இப் பெண்ணுடன் தொடர்புகொண்டு தம்மாலான உதவிகளைச் செய்யலாம்.

தற்போது அவர் வழக்கை நடத்த தமிழர்கள் நிதி உதவி செய்யலாம். அமெரிக்காவில் மகிந்தருக்கு பிரச்சனை பிரித்தானியாவிலும் அவருக்கு பிரச்சனை, சுவிஸ் நாட்டை எடுத்தால் ஜகத் டயஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தற்போது அவுஸ்திரேலியாவிலும் வழக்கைப் போட மீனா கிருஷ்னமூர்த்திக்கு உலகத் தமிழர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். அவர் கரங்களைப் பலப்படுத்தவேண்டும் இதன் மூலமே மகிந்தர் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு செல்லாது தடுக்க முடியும். அவர் அதில் கலந்துகொள்ள முடியவில்லை என்றால் இலங்கைக்கு பாரிய அழுத்தம் ஒன்று உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. தனி ஒரு ஆளாக கஷ்டப்படும் மீனாவுக்கு உதவுங்கள் மக்களே !

contact Meena on: info@australiantamilcongress.கம

TEL: 006129423474741

Send To Friend | செய்தியை வாசித்தோர்: 23216 http://www.athirvu.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.