Wednesday, October 26, 2011

ஜெய்ப்பூரில் 24 மணி நேரமும் பறக்கின்றது தேசியக் கொடி ???

72 அடி நீளத்தில் தயாரான பிரமாண்ட தேசியக்கொடி: ஜெய்ப்பூரில் பறக்க விடப்பட்டது


இந்தியாவில் இதுவரை இல்லாதபடி மிகப்பிரமாண்டமான தேசியக்கொடி ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசியக்கொடி 48 அடி அகலமும் 72 அடி நீளமும் கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த கொடி தயாரிக்கப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை பகல்- இரவு என்று 24 மணி நேரமும் பறக்க தடை இருந்தது.

இதை எதிர்த்து குருஷேத்திரா தொகுதி எம்.பி. நவீன் ஜிண்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு தேசியக்கொடியை பகல், இரவில் எப்போதும் பறக்க விடலாம் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்திய உள்துறையும் இந்த பிரமாண்ட தேசியக்கொடியை பகல், இரவு எப்போதும் பறக்க விடலாம் என்று அனுமதி கொடுத்தது
.
இந்த நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அந்த பிரமாண்ட தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. அங்குள்ள சென்டிரல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கொடியை ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக் கெலாட் ஏற்றி வைத்தார்.

100 அடி உயர கம்பத்தில் அந்த பிரமாண்ட தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இரவில் அந்த தேசியக்கொடி பறப்பதை கண்டு ரசிக்கும் வகையில் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றமே அனுமதித்து விட்டதால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?


2 comments:

  1. ஆச்சரியம் ... தேசிய கொடியை பொதுவாக இரவு நேரங்கள் , மழை நேரங்களில் பறக்கவிட கூடாது என்று உண்டு . இப்பொழுது மாற்றி விட்டார்களா ..?

    ReplyDelete
  2. எனக்கும்தான் ஆச்சரியமாக இருக்கின்றது. 3:2 நீள அகலம் இருக்க வேண்டும் என்பதாக நினைவு. ஜனவரி26, ஆகஸ்டு 15 அனைவரும் எங்கும் சூரிய உதயத்திற்குப் பின்பு கொடியினை ஏற்றலாம். சூரியன் மறைவதற்குள் கொடியினை இறக்கிடல் வேண்டும். இதே விதி முறைப்படி அரசு அலுவலகங்களில் ஏற்றி இறக்கலாம். ஏற்றுவதற்கு உயர் அதிகாரிகள் இருப்பர். இறக்குவது கடைநிலை ஊழியரின் கடமையாகத் திணிக்கப்படும். பாராளுமன்றம், சட்டமன்றம் எப்படியோ? ஆனால் பூங்காவில் இரவு பகல் 24 மணி நேரமும் தேசியக்கொடி பறக்கும் தகவலைக் கேட்பது இதுதான் முதல் முறை. விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்குமோ? தெர்ந்தோர் கூறினால் நன்று.

    ReplyDelete

Kindly post a comment.