Thursday, September 15, 2011

சோனியாகாந்தி கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். நியூயார்க் ஆஸ்பத்திரியில் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தது. அங்கு 1 மாதம் தங்கி சிகிச்சை பெற்றார்.

கடந்த வரம் சோனியா டெல்லி திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். கட்சி விவரங்களை கவனிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1 1/2 மாதத்துக்குப்பின் முதல் நிகழ்ச்சியில் சோனியாகாந்தி இன்று கலந்து கொண்டார்.

உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் சோனியாகாந்தி பங்கேற்றார். தேர்தலை காங்கிரஸ் சந்திப்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.