Thursday, September 15, 2011

தமிழ்நாட்டின் வழியாக ஊடுறுவல் நடக்கிறது..-ப.சிதம்பரம்





2001,
செப்டம்பர் 11 ௧௮0 ௧௮0 பயங்கரவாதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்த அமெரிக்கா, இந்தப் பத்தாண்டுக் காலத்தில் செய்த செலவு 4 டிரில்லியன் டாலர்கள் (ஒரு டிரில்லியன் = 45 இலட்சம் கோடி அதாவது 180 லட்சம் கோடி ரூபாய்), ஆயினும் அந்த நாடு பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அப்பாற்றப்பட்டது என்று கூற இயலாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று தொடங்கிய மூன்று நாள் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம், “2001, செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தாக்குதலிற்குப் பிறகு, அதற்குக் காரணமான பயங்கரவாத இயக்கும் அல் கொய்தா என்று பிரகடனம் செய்து, அந்த இயக்கத்தின் மீதும், அதன் துணை அமைப்புகள் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.

தனது துறையின் கீழ் உள்ள 22 அமைப்புகளை இந்தப் போரில் ஈடுபடுத்தியது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் போர் தொடுத்தது, 6,000 இராணுவத்தினரை பலி கொடுத்தது, அது தொடுத்த போரில் 1,37,000 அப்பாவிகள் கொல்லப்பட்டனர், 78 இலட்சம் பேர் அகதிகளாயினர்,

இந்தப் போருக்காக அது செலவிட்டத் தொகை 4 டிரில்லியன் டாலர்கள் என்று அந்நாடு சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகின்றன. அவ்வாறு இருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டின் மீது மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன, அதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 34 பேர் காயமுற்றுள்ளனர். 3மிகப் பெரிய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ள
ன” என்று சிதம்பரம் கூறினார்.

“இரண்டு மாத இடைவெளியில் இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பது இந்த அரசின் மீது படிந்த கறைதான். இதற்காக மத்திய அரசும், பாதுகாப்பு அமைப்புகளுமே குற்றம் சாற்றப்படுகின்றன, அது இயற்கைதான். அதற்காக நாங்கள் முழுப்பொறுப்பு ஏற்கிறோம். இப்படிப்பட்ட தாக்குதல்கள் எந்த சூழலில் நடந்தன என்பதை விளக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும்” என்று கூறிய ப.சிதம்பரம்,

“இந்த உலகில் எந்த ஒரு நாடும் பயங்கரவாத அச்சுறுத்தலிற்கு அப்பாற்பட்டதல்ல, இந்த பத்தாண்டுகளில் 22 நாடுகளில் 279 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் மிகவும் பாதிக்கப்பட்டவை ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியன. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானுமே பயங்கரவாத மையங்களாக இருக்கின்றன. மிகப் பெரிய 5 பயங்கரவாத இயக்கங்களில் 4 பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன, அவற்றில் லஸ்கர் இ தயீபா, ஜெய்ஸ் இ மொஹம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியன இந்தியாவை குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற
ன” என்று கூறினார்.

தமிழ்நாட்டின் வழியாக ஊடுறுவல் நடக்கிறது..-

“ஜம்மு காஷ்மீரில் இருந்து ஊடுறுவல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், மிகப் பாதுகாப்பாக இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாகவும் ஊடுறுவல் நடந்து வருகிறது” என்று பேசியுள்ள சிதம்பரம், தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்படுபவர்களைக் கொண்டு உள்நாட்டிலேயே பயங்கரவாத அமைப்புகள் உருவாகின்றன. அவைகள் எவ்வாறு குண்டுகள் செய்வது என்பதை அறிந்துகொள்கின்றன என்றும் கூறினார்.

“இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளும் உள்ளன. அவைகள் தீவிரவாதத்தைப் பேசி இளைஞர்களை தங்கள் அமைப்புகளுக்கு ஈர்க்கின்றன. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு, இப்படி பல தாக்குதல் மையங்களை உருவாக்கி வைத்துள்ளது. இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனும் அமைப்பில் இருந்தே பலரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்குள் சேர்க்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் குண்டுகளைத் தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன. 2000வது ஆண்டில் இருந்து செயல்பட்டுவரும் 48 பயங்கரவாத அமைப்புகளை நான் ஆவணப்படுத்தியுள்ளேன். இவற்றில் 37 அமைப்புகள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவற்றைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

2008 மும்பைத் தாக்குதலிற்குப் பிறகு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறனை உருவாக்கியுள்ளோமா என்ற வினா எழுப்பப்படுகிறது. இதற்கு ஆம், இல்லை என்று கூறலாம். பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்கொள்ள 36,000 பேரைக் கொண்ட 36 பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 21 பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்கள் அளவில் 132 பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவைகளுக்காக செலவிடப்பட்டதில் ரூ.1,002 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது” என்றும் சிதம்பரம் கூறினார்.

இந்த ஆண்டில் நமது நாட்டின் காவல் பணிகளை பலப்படுத்த மட்டும் ரூ.1,01,858 கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ள சிதம்பரம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.