Wednesday, September 21, 2011

இந்துக்கோவிலுக்குப் பரிகாரம் செய்யச் சொன்ன இஸ்லாமியர்!

வாராந்தரி ராணியில் 47வாரங்களாக ஜோதிடம்: புரியாத புதிர் என்று தொடர்ந்து ராஜேஷ் கட்டுரை எழுதி வருகின்றார். இதை அறிந்த ராஜ்குமார் சந்தோஷி என்ற புகழ் பெற்ற இந்திப்பட இயக்குநர், தன்னுடைய ஒரே ஒரு ஜோதிட அனுபவத்தை திரைத் துறைச் செல்வர் ராஜேஷுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். இந்திப் பட இயக்குநர் என்றவுடன், அவர் இந்திக்காரர் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மதுரை அருகில் உள்ள அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர். செள்ராஷ்ட்ர இனத்தச் சேர்ந்தவர். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசியதால் ராஜேஷுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

ராஜ்குமார் சந்தோஷியின் தந்தை பெயர், பி.எல்.சந்தோஷி. 25இந்திப்படங்களை இயக்கி இருக்கிறார். 1957ல் சந்தோஷி பிறந்திருக்கின்றார். அப்பா வழியில், திரையுலகில் சரியான வாய்ப்புக் கிடைக்காமல் 1987ல் மன வருத்தத்தில் இருந்திருக்கின்றார். அவரது நண்பர் வர்மாஜி, டிக்கெட் பரிசோதகரும் சோதிடருமான பாங்கிடிவாலா பாபா என்பவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கின்றார்.

பாங்கிடிவாலா, ஒரு வளையல் வியாபாரியைப் போல் அடுக்கி வைத்திருக்கும் அநேக வளையல்களை எடுத்து வைத்திருக்கிறார். அந்த வளையல்களைத் தன் கைவிரல்களால் திருகிக் கொண்டே ராஷ்குமார் சந்தோஷியைப் பற்றிய முழு விபரத்தையும், எதிர்காலத்தைப் பற்றியும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். மேலும், ஜெயிலுக்கு எதிரில் உள்ள ஆஞநேயரும், சனிபகவானும் சேர்ந்திருக்கும் கோவிலுக்கு மூன்று வாரம் சனிக்கிழமை சென்று, கறுப்பு உளுந்து, குங்குமம், நல்லெண்ணைய், ஊதுவத்தி இவைகளைக் கொண்டு சாமி கும்பிட்டு வரச் சொல்லுங்கள். வாய்ப்புக்கள் வீடு தேடி வரும். என்றார்.

அப்படியே நடந்தது. வறுமை நீங்கியது. பெரும் செல்வந்தர் ஆனார். ஆறு ஆண்டுகள் பாபா பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின்னர் அரிதின் முயன்று பார்த்தபோது பாபாவைப் பார்த்தபோது வறுமையின் உச்சக் கட்டத்தில் இருந்தார். உதவுவதாகக் கூறியபோது சிலைபோல் மெள்னமாகவே இருந்தார்.

இதனை எழுதிய ராஜேஷ் எழுப்பும் வினாக்கள்:-

௧.பாங்கிடி வாலா பாபா ஜோதிடரா? ஆருடம் சொல்பவரா? அல்லது இந்த சக்தியை இயற்கையாகப் பெற்றவரா?

௨.முகம்மதியரான அவர் ஆஞசநேயர்- சனிபகவான் கோவிலுக்குப்போய் வழிபடச் சொல்லக் காரணம் என்ன?

௩.அவர் சொன்னபடி கோவில்களில் பூஜை செய்யாதிருந்தால் ராஜ்குமார் சந்தோஷிக்குப் படவாய்ப்புக்கள் வந்திருக்காதா?

௪.பாங்கிடி வாலா பாபாவிடம் அழைத்துச் செல்வதற்காகவே வர்மாஜியின் நட்பு, ராஜ் குமார் சந்தோஷிக்குக் கிடைத்ததா?

௫.ஒரு பூ மலர்வதற்கு ௧0௮ காரணங்கள் இருக்கின்றன என்ற பரிணாம ததுவத்தை உலகிற்கு அளித்த சார்லஸ் ராபர்ட் டார்வின் சொன்னதைப் போலத்தான் ராஜ்குமார் சந்தோஜிக்குக் கிடைத்த சினிமா வாய்ப்பையும், அவரது முன்னேற்றத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

ஒன்றுமே புரியலையே?
உதவி :-ராணி & ராஜேஷ். ௨௫-0௯-2011

0 comments:

Post a Comment

Kindly post a comment.