Wednesday, September 21, 2011

முல்லைப் பெரியாறு அணைக்காகக் கேரளத்தின்மீது படை எடுக்க முடியாது.?



கேரளாவிலும் தமிழகத்திலும் தேசியக் கட்சிகள் இந்திய தேசியத்தை ஆள்வோர்தான் கேரளத்தையும் ஆள்கின்றனர். ஆனால், முல்லைப் பெரியார் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. சர்வ தேசியவாதிகளாலும் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

அந்நிய ஆட்சியின்போது, கேரள எல்லைக்குள், தமிழகத்திற்காக, முல்லைப் பெரியார் அணையைக் கட்டி முடித்து, நிர்வாகப் பொறுப்பை சென்னை மாகாணம் மேற்கொள்ள முடிந்தது.

சுதந்திர இந்தியாவில் முல்லைப் பெரியார் குறித்து நியாயமானதோர் முடிவை எட்ட இயலவில்லை. தமிழகத்திற்கு எதிரான திசைவழியிலேயே சிக்கல் நீடிக்கின்றது.

முல்லைப் பெரியாறு அணைக்காகக் கேரளத்தின்மீது படை எடுக்க முடியாது. ஆனால், பால் வண்டிகள், அரிசி லாரிகள், மணல்- செங்கல் லாரிகள், அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் எல்லாவற்றையும் தடை செய்யலாமல்லவா?

நியாயம் கிடைக்காமலா போய்விடும்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.