Monday, September 19, 2011

காயல்பட்டணத்தில்திராட்சைப்பழ அளவில்அதிசயக் கோழிமுட்டை!

காயல்பட்டணத்தில் மிகச்சிறிய அளவில் கோழி ஒன்று முட்டையிட்டுள்ளது. இந்த அதிசய முட்டையை ச்சுற்றுவட்டார மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.சமீபகாலமாக நாம் பயன்படுத்தும் பொருட்களை மிகச்சிறிய அளவில் உருவாக்கி சிலர் சாதனை படைத்து வருகின்றனர்.

சமீபத்தில் கூடமிகச்சிறிய அளவில் மீன்தொட்டி ஒன்றை உருவாக்கி வாலிபர் ஒருவர் சாதனை படைத்தார். இதைப்போல் இளைஞர்களுக்கு போட்டியாக இயற்கையும் அவ்வப்போது சிறு சிறு பொருட்களை படைத்துவருகிறது. நெல்லிக்காய் அளவில் தேங்காய், இலந்தைப் பழம் அளவில் எழுமிச்சைப் பழம் என்று இயற்கையின் அதிசயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதே வரிசையில் காயல்பட்டணம் சீதக்காதி தெருவில் வசித்து வரும்காயின் அப்துல்லா என்பவரது வீட்டில் உள்ள கோழி ஒன்று 2.செ.மீ உயரத்தில் 540மில்லிகிராம் எடையில் முட்டையிட்டுள்ளது. மொத்தத்தில் முட்டையின் அளவு ஒருதிராட்சை பழத்தின் அளவே உள்ளது.

அதிசய முட்டையை காயல்பட்டணம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அதிசயமாக பார்த்துசெல்கின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.