Monday, September 19, 2011

இராமேஸ்வரம் கோயிலில் விடப்பட்ட பெண்குழந்தை

இராமேஸ்வரம் கோயிலில் அனாதையாக விடப்பட்ட மூன்று வயது ஊனமுற்ற பெண் குழந்தையைப் பணியாளர்கள் . ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சேதுமாதவ தீர்த்த குளம் அருகே பிரகார நடைமேடையில், நேற்று மாலை குழந்தை ஒன்று நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்தது. அப்பகுதியைச் சுத்தம் செய்ய சென்ற தனியார் நிறுவன சுகாதாரப்பணியாளர்கள் குழந்தையை மீட்டனர்.

கை, கால்கள் இயக்கம் இல்லாத நிலையில் நீண்ட நேரமாக அழுது மூச்சுத்திணறலுடன் இருந்த குழந்தைக்கு, பெண் பணியாளர்கள் பிஸ்கட் பால் கொடுத்து, அழுகையை நிறுத்தினர். குழுந்தையைக் கோயில் உதவி கமிஷனர் கண்காணிப்பாளர் கண்ணதாசன், வெங்கட்ராமன் பார்வையிட்ட பின், குழந்தை கோயில் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் குழந்தை யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.