Monday, September 19, 2011

102வயதில் சிந்திப்பது நின்றது! இயற்கை எய்தினார் தோழர் சி.சுப்பிரமணியன் !!

தோழர் சி.எஸ். என்று அன்போடு,ம் மரியாதையோடும் அழைக்கப்பட்டுவந்தவர், சி. சுப்பிரமணியம். ஜுலைபதினாறு1910ல் சென்னை சைதாபேட்டையில் சுந்தரம் ஐயர்-மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். தஞ்சை மாவட்டம் கோமல் கிராமமே இவர்களது பூர்விகம். கல்லூரியில் முதல் மாணாக்கனாகத் தேறிய மகனைப் பெருங்கனவுகளோடு , சுந்தரம் அய்யர், இங்கிலாந்த்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுபி வைத்தார்.

மோகன் குமாரமங்கலம், பூபேஷ் குப்தா, என்.கே. கிருஷ்ணன், பார்வதிகிருஷ்ணன் போன்றோரும் இங்கிலாந்தில் பயின்று வந்தனர். சி.எஸ். , ஐ.சி.எஸ். ஆகப் படித்து வந்தார். லண்டனில், இந்தியச் சங்கம் ஒன்று இயங்கி வந்தது. கார்ல் மார்க்ஸ், ப்ல்லாண்டுகள் படித்து ஆய்வை மேற்கொண்ட நூலகத்திற்கருகில் அது ஒரு சிறு அறையில் இயங்கிவந்தது. அதில் வி.கே. கிருஷ்ணமேனனும் உறுப்பினராக இருந்தார். இந்குதான், பூபேஷ் குப்தா, ஜோதிபாசு, மோகன் குமார மங்கலம், என்.கே.கிருஷ்ணன், சி.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் கூடி இந்திய சுதந்திரத்திற்காக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விவாதிப்பது வழக்கம். சர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்தின் தலை சிறந்த சிந்தனையாள்ர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ரஜனி பாமிதத் இவர்கட்கு அரசியல் பாடம் கற்பித்துள்ளார்.

ஐ.சி.எஸ்.படித்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் போலவே, அத்தனை பாடங்களிலும் முதல்வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக சி.சுப்பிரமணியமும் தேறினார். இந்தப் பாடத்தில் குதிரைச் சவாரி செய்து காட்டவேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு அடையாளமாக குதிரைச் சவாரியைப் புறக்கணித்தார். ஐ.சி.எஸ். பட்டம் பெறாமலேயே இந்தியா திரும்பினார். சுபாஷ் குதிரச் சவாரியைச் செய்து காட்டி பட்டமும் பெற்றார். இந்தியா திரும்பியதும் ஐ.சி.எஸ். பட்டத்தை உதறி எறிந்தார்.

சி.எஸ். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் . சென்னைக் கோட்டையில் பறந்த ஜாக் கொடியைக் கம்பத்தில் ஏறி இறக்கிவிட்டு, மூவர்ணக் கொடியை ஏற்றியவரும் பாரதியாரால் போற்றப் பட்டவருமான ஆர்யாவும், சி.எஸும் காங்கிரஸ் கட்சியைக் கட்டுவதில் ஈடுபட்டனர். அடிக்கடி கைதாகி வெளிவருவது இருவருக்கும் வாடிக்கையாவிட்டது.

கராச்சியிலிருந்து சென்னைக்கு வந்த போராளி அமீர் ஹைதர்ஹான், சி.எஸ், சட்டக் கல்லூரி மாணவராய் இருந்த பி.சுந்தரையா புதுவை வி.சுப்பையா,,அச்சுத் தொழிலாளி மாணிக்கம் பாம்பேயிலிருந்து சென்னைக்குவந்த எஸ்.வி.காட்டே , 1936ல்கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சி என்ற பெயரில் இயங்கி வந்தனர்.

1937ல்காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் வார ஏடாக ஜனசக்தியைக் கொண்டுவர சி.எஸ். சுப்பிரமணியம் ஏற்பாடு செய்தார். இவர்களோடு சீனிவாசராவ், ஜீவா, ராமமூர்த்தி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். சி.எஸ். மற்றும் பி.இராமமூர்த்தி பம்பாய் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றனர். காந்தியின் தீர்மானத்தை எதிர்த்த 15பேரில் இந்த இருவரும் அடங்குவர். காந்தி அடிகள் இவர்களது கொள்கை உறுதியைப் பாராட்டினார். அதே நேரத்தில் அது தவறானது என்றும் சுட்டிக் காட்டினார்.

சுதந்திரத்திர்குப்பின் தடை செய்யப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்கான த்டை, 1950ல் நீக்கிக் கொள்ளப்பட்டது. மனைவி சுகுணா பாயின் மரணத்திற்குப்பின், கோபிச்செட்டிபாளையத்திலிருந்து, இவரை அம்பத்தூருக்கு அழைத்துவந்து , நியூசெஞ்சுரி காலனித் தோழர்கள் பேணிக் காத்து வந்தனர்.2011செப்டம்பர்18காலைஎட்டரை மணிக்கு இவர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவ்வாறு கூறுவது எதனால் எனில். கடைசிவரை அவரது நினைவிலும் மறதியில்லை. பேச்சிலும் தடுமாற்றமில்லை.

1980ல் தென்னிந்திய ஆய்வு மையம் தொடஙி சில நூல்களை வெளியிட்டுள்ளார். இளசை மணியனுடன் இணந்து சேகரித்து வெளியிட்ட பாரதி தரிசனம், பாரதி அன்பர்களுக்கும், பாரதி ஆய்வாளர்களுக்கும் பேருதவியாய்த் திகழ்கின்றது. தோழர். நாகை. கே.முருகேசனுடன் இணந்து, தென்னிந்த்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலு என்ற நூலைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டு ஐ.சி.எஸ். கல்வியைத் துச்சமெனக் கருதித் தூக்கி எறிந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் துவக்கியவருள் ஒருவர் என்று கட்சியிடமிருந்து பதவியையோ/ பணத்தையோ/ பாராட்டையோ எதிர்பார்க்கவில்லை. மார்க்சியமே வாழ்க்கையாகக் கொண்டார். அவரது எலும்பாலான உடலை சதைப் பகுதியே அற்ற தோல் போர்த்தியிருந்தது. அதேபோல் அவர் மனதில் மார்க்சியம்பற்றிய ஆசையினைத்தவிர வேறெந்த ஆசையுமே எள்ளளவும் கிடையாது. என்பது இவரது அஞ்சலிக் கூட்டத்திற் பங்கேற்றவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.

இன்றுஜனசக்தி,தீக்க்கதிர்,தினமணி இவரது மறைவுச் செய்திகளை வெளியிட்டு அஞ்சலி செய்திருந்தன.2011செப்டம்பர்19.

0 comments:

Post a Comment

Kindly post a comment.