Tuesday, September 6, 2011

அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இராமம்பாளையம்,காரமடை ஒன்றியம்
மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.






பள்ளி பற்றிய தகவல்கள்:

1. அமைதியான கிராமச் சூழல்.
2. போதுமான கட்டட வசதி.
3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
4. கணினி பயிற்சி வகுப்புகள்.
5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
9. தலைமைத்துவப் பயிற்சி.
10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
13.  வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card),  ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Dairy).  (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).

மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள்  அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVDPlayer.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி 


iஇன்று  காலையில் kalvithulir.blogspot.com வலைப்பூவில்  63  வயது ஓய்வு  பெற்ற ஆசிரியை  தனது பணத்தில் சத்துணவுக்கூடம் அமைத்துக் கொடுத்த  தகவலைப் பார்த்தேன். அதே  வலைப்பூவில் இராமம் பாளையம்  பள்ளியைப் பற்றிய தகவலையும்  பார்த்தேன்.

பின்னர்  அஞ்சல்காரர் மூலம்    பாடம், புதிய தலைமுறை ஆகிய இதழ்கள் வந்திருந்தன. இரண்டிலுமே மேற்படி  பள்ளி குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

முயற்சி திருவினையாக்கும்  என்னும்  தலைப்பில் பாடம் மாத இதழும், ஆசிரியர்கள் அமைத்த ஆசிரியப்பள்ளி என்னும்  தலைப்பில் புதியதலைமுறை வார  இதழும் இந்தப்பள்ளியைப்பற்றிப்  பாராட்டியிருந்தன

இதன்  தொடர்ச்சியாக kalvisolai.com அரியதொரு  இணையதளமும் அறிமுகமானது. ஆசிரியர்களுக்குத்  தேவையான அனைத்துத்  தகவல்களையும் கொண்ட  இந்தத் தளம்  ஆகஸ்டு  மாதத்திலேயே இந்தப்பள்ளியைப் பாராட்டிய பெருமையை முதலில் பெற்றுக் கொண்டது.கல்விசோலை குறித்து தனியாகப்  பதிவு  செய்வேன்.

1930ல் இருந்து ஆணு விழாவே  காணாத இப்பள்ளி 2008-09 ஆம் கல்வி நாண்டிற்கான ஆண்டு  விழாவை 29.ஏப்ரல்,2009-ல் கொண்டாடியது. ஊர்ப்பொது மக்கள்,  நண்பர்களின் வட்டாரத்தின் மூலம்  ரூபாய் 80,000க்கும்  மேலான தளவாடப்  பொருட்கள் இலவசமாகப் பெறப்பட்டன. தாய்மொழிவழிக்கல்வி  என்பதே ஓர்  சாதனைதானே.


தலைமை ஆசிரியை-மீ,சரஸ்வதி (வயது 56)
உதவியாசிரியர்         -ஈ.பிராங்கிளின் (வயது 35)
மாணாக்கர் மொத்தம் 34 (ஆண்கள் 17, பெண்கள் 17)

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இராமப் பாளையம்
ஜடையப் பாளையம், அஞ்சல்
மேட்டுப் பாளையம் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்-641 302


0 comments:

Post a Comment

Kindly post a comment.