Thursday, September 1, 2011

பேராலயமாவதற்காக நூறு ஆண்டுகள் காத்திருந்த புதுவை இதய ஆண்டவர் திருத்தலம்!

நாடு கடந்த அரசு ந்ன்ற பேச்சு அடிபட்டபோதுதான், பொள்ளாச்சி நசன் புண்ணியத்தால், தலாய்லாமா, இமாசலப்பிரதேசம் தருமஸ்தலாவில் அத்தகையதொரு ஆட்சியையே நடத்தி வருவது தெரிய வந்தது. அவருக்கென்று தனியாக இணையதளமும் இயக்கப்பட்டு வருகின்றது. ஒரு நாட்டின் தலைவருக்குரிய சகல வசதிகளையும் அனுபவித்து வருகின்றார்.

கிறித்துவ ஆலயங்கள் அனைத்தும் ஒரே தகுதி வாய்ந்தவை அல்ல என்பதை இன்றைய தினமணியைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆலயங்கள் பேராலயங்களாகப் போபாண்டவரால் தகுதி உயர்த்தப்படுகின்றன. இந்த வகையில் ஆசியாவில் ஐம்பது பேராலயஙகள் இருக்கின்றன. இந்தியாவில் இருபது பேராலயங்கள் இருக்கின்றன.

தற்பொழுது புதுவையில் உள்ள இதய ஆண்டவர் திருத்தலம் பேராயலமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆலயம் நூற்றாண்டு விழாவைக்கண்டது. புதிய தகுதியின் மூலம், ஆசியாவில் ஐம்பதாவது பேராலயமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறாவது பேராலயமாகவும், புதுவையில் முதலாவது பேராலாயமாகவும் சிறப்புப் பெற்றுள்ளது.

வாட்டிகன் நகரில் அரசாட்சி செலுத்திவரும் போப்பாண்டவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள், உலகெங்கிலும் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள். கிறிஸ்துவ மதத்தின் இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் போப்பாண்டவரின் ஆளுகைக்குட்பட்டவர்கள் அல்லர்.

புதுவைப் பேராலய அறிவிப்பு விழா செப்டம்பர் இரண்டாம் தேதி நிகழ்விருக்கின்றது. அதற்கு போப்பாண்டவரின் இந்தியாவிற்கான தூதர், சால்வத்தோரே பெனாக்கியோ புதுவைக்கு வருகின்றார். இதற்கான இலத்தீன் ஆணவத்தை தூதர் வாசிக்கின்றார். http://sacredheartbasilicaindia.com/
மேற்படி இணையதளம் பேராலயத்தின் பெருமைகளை விளக்குவதற்காகவே தற்பொழுதான் துவக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான போப்பாண்டவரின் தூதர் எப்பொழுதும் இருப்பது இந்தியாவிலா அல்லது ரோமிலா என்பது தெரியவில்லை. அறிவிப்பு ஆணையின் மொழி இலத்தீன் என்பதையும் மறக்கக் கூடாது.

சிறப்புத் தபால் தலை வெளியீடு, நினைவுமலர் வெளியீடு, ஆடல் பாடல் நிகழ்வுகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்பு எல்லாமே உண்டு. அன்பழகன் எம்.எல்.ஏ வும் ஆஜராகின்றார். எந்த அன்பழகன் என்பது தெரியவில்லை.

அரசியல்வாதிகளைப்போன்றே ஆன்மிகவாதிகளும் வசதியாக வாழ்கின்றனர். ஆன்மிகத்தின் பெயரால் விழாக்களை நடத்துகின்றனர். எளிமாக விழாக்களை நடத்திவிட்டு , விழாக்களுக்கு ஆகும் செலவினைக் கொண்டு வசதியே அற்றவர்களுக்குக் கல்வி அறிவு கொடுத்து அரசாங்கத்திற்கு ஆன்மிகவாதிகள் வழிகாட்டலாமே?

0 comments:

Post a Comment

Kindly post a comment.