Thursday, September 1, 2011

சீனாவிற்கு முதலிடம்! இந்தியாவிற்கு இரண்டாம் இடம்!! தொழில் துறையில்!

ஆசியா-பசிபிக் ஒத்துழைப்பு நாடுகளில் சிறந்த 200 நிறுவனங்களில் , 35 நிறுவனங்களுடன் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக போர்பஸ்-ஆசிய பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முதல் இட‌த்தை சீனா பிடித்துள்ளது. ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு நாடுகளில் , தகவல் தொழில்நுட்பம், பாலியஸ்டர் உற்பத்தி, பிலிம்சுருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் துறையினைச் சேர்ந்த சிறந்த 200 நிறுவனங்களை , போர்பஸ் ஆசிய பத்திரிகை இந்தாண்டு (2011-) ஆண்டுக்கான நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் இவற்றின் ஆண்டு வருமானம் 1 பில்லியன் (100 கோடி) முதல் 5 பில்லியன் டாலர் வரை உள்ள நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா 35 நிறுவனங்கள் இடம் பெற்று இரண்டாம் பிடித்துள்ளன. முதல் இடத்தை 65 நிறுவனங்களை கொண்டு சீனா பிடித்துள்ளது.

இது குறித்து போர்பஸ் ஆசிய பத்திரிகையின் ஆசிரியர் டிம்-ஃபெர்குசன் கூறுகையில், கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து பொருளாதார விகிதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு அதன் வாயிலாகவே இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன .

சீனா 64, இந்தியா 35 நிறுவனங்களை கொண்டு முதல் இரண்டு இடம்பிடித்துள்ளன. இதனைத்தொடர்ந்து இலங்கை 4 நிறவனங்களையும், பாகிஸ்தான் இரண்டு நிறுவனங்க‌ளையும் கொண்டு போர்பஸ் ஆசிய பத்திரிகையின் தேர்வில் இடம் பெற்றுள்ளன என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.