Monday, September 5, 2011

சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: காஷ்மீருக்கு ரெயில் போக்குவரத்து





சீனாவில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
 
சீனாவுடன் பாகிஸ்தான் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தார் 3 நாள் பயணமாக சமீபத்தில் சீனா சென்று இருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
இந்த நிலையில் சீனா- பாகிஸ்தான் இடையே வர்த்தகத்தை மேம்படுத்த எல்லை கடந்த ரெயில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் சீனாவின் வட மேற்கு ஷின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள காஷ்கர் நகருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் இடையே ரெயில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.
 
இந்த தகவலை சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சீனாவுக்கான 5 ஆயிரம் மைல் தூரத்துக்கு தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
 
மேலும் சீனா-பாகிஸ்தான் இடையே குழாய் மூலம் கச்சா எண்ணை மற்றும் கியாஸ் கொண்டு செல்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.