Monday, September 5, 2011

தன்னம்பிக்கையின் அடையாளம் "பாவனாஅஹிம்சைப் பட்டாடை விற்பனையாளர்



 
 
அகிம்சா முறையில் தயாரிக்கப்பட்ட பட்டாடையை பார்வையிடுகிறார் லேடி ஆண்டாள் வெங்கட சுப்பா ராவ் பள்ளியின் தாளாளர் பிரேமா குமார். உடன், "சாஹாகிக்கா' விற்பனை
: உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக உள்ள நம்மில் எத்தனை பேர் சோதனைக் காலங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம்? ஆனால், மாற்றுத் திறனாளியான ஒரு பெண், தனி ஒரு ஆளாக வியாபாரத்தில் கால்பதித்து, தன்னுடைய தளராத முயற்சியால் மற்ற எவருக்கும் தான் சளைத்தவர் அல்ல என நிரூபித்துக் காட்டியுள்ளார் சென்னையை சேர்ந்த பாவனா. 
 
சிறுவயதில் இருந்தே உடலின் முக்கிய பாகங்கள் செயல்படாத நிலையில் உள்ள பாவனா, தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார். பேச்சுத் திறனும் பாதிக்கப்பட்டுள்ள அவர், லேடி ஆண்டாள் வெங்கட சுப்பாராவ் பள்ளியில் பிளஸ் 2-வும், எத்திராஜ் கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். 
 
இவர் தற்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் "சாஹாகிக்கா' எனும் அகிம்சா முறையில் தயாரிக்கப்பட்ட பட்டுத் துணிகளை விற்பனை செய்யும் நிலையத்தை தொடங்கியுள்ளார். சொல்வதை புரிந்து கொள்ளும் பாவனா தன் தாயார் கல்பனாவின் உதவியோடு இந்த விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளார்
 
.பாவனா குறித்து கல்பனா கூறியது: கல்லூரிப் படிப்பை முடித்த பாவனா, சுயமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என தீர்மானித்து பல இணைய தளங்களை ஆராய்ந்தார். அப்போது, பட்டுப் பூச்சிகளை கொல்லாமல் தயாரிக்கப்படும் அகிம்சா வகை பட்டுகள் குறித்த தகவல் அவரை மிகவும் ஈர்த்தது.
 
ஒரு பட்டுச் சேலையை உற்பத்தி செய்ய, சராசரியாக 600 கிராம் பட்டு நூல் தேவைப்படும். ஒரு கிராம் பட்டு நூல் எடுக்க 15 பட்டுப் புழுக்கள் வரை கொல்லப்படுகிறது. இதனால், தான் பாவனாவுக்கு அகிம்சா பட்டுப்புடவை விற்பனை நிலையத்தை தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.உடனே,
 
இந்த வகை பட்டுப் புடவைகள் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தருவிக்கப்படுகிறது என்ற தகவலையும் இணையதளம் மூலம் பெற்று என்னிடம் தந்தார் பாவனா. தன்னுடைய சொந்த முயற்சியாலேயே இந்த விற்பனை நிலையம் உருவாக வேண்டும் என நினைத்த அவர், வங்கியில் தொழில் கடன் பெற்று அதை சாதித்துள்ளார்.
 
ஒரு தாயாக பாவனாவுக்கு உதவியாக மட்டுமே இருக்கிறேன். மற்றப்படி இந்த விற்பனை நிலையம் அவருடைய வழிகாட்டுதலின்படிதான் உருவாகியுள்ளது என்றார் கல்பனா.லேடி ஆண்டாள் வெங்கட சுப்பா ராவ் பள்ளியின் தாளாளர் பிரேமா குமார் கூறுகையில், பள்ளிக்கூட நாள்களிலிருந்தே பாவனா படிப்பில் மட்டும் அல்லாமல் மற்ற விஷயங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவரைப் போல் உள்ளவர்களுக்கு பாவனா தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார் என்றார் அவர். 

நன்றி:தினமணி 5-09-2011

0 comments:

Post a Comment

Kindly post a comment.