Friday, September 2, 2011

காணாமற் போனோர்களுக்கான சர்வதேசதினம்.

உலகெங்கும்  காணாமல்  போனோர்  எண்ணிக்கை  இலட்சக்கணக்கில்  இருக்கக்கூடும்.  அவர்களைப்  பற்றிய  தகவல்களுக்காகக்  காத்திருக்கும்  உறவினர்களின்  துயரம்  குறித்த கவனத்தை  ஈர்க்கும்  வகையில்  ஆகஸ்டு முப்பதாம்  தேதி  காணாமல்  போனோர்  தினமாக ஐ,நா. பிரகடனப் படுத்தியுள்ளது.

கருத்து வேறுபாடுகள் மற்றும் வன்முறை மேற்கொள்ளுதல்  போன்றவற்றிற்காகச்  சில  நாடுகளில் ஆட்களை கட்டாயமாகக்  கடத்தி  அல்லது  வேறு  வழியில்  காணாமற்  போகச்செய்யும்  நடைமுறைகளை  ஐ.நா. மேற்படிநாளில்  கண்டித்திருக்கின்றது.

காணமற்போனவர்களின்  குடும்பத்தவர்களது  தேவைகள்  எப்போதாவதுதான்  கவனிக்கப்படுவதாகச்  செஞ்சிலுவைச்சங்கம்  கூறுகின்றது. அந்தக்  குடும்பங்களுக்கு மேலும்  தொடர்ந்து  உதவிகள் செய்யப்படவேண்டும் என்றும்  கூறுகின்றது.

காணாமற்போனவர்கள்  உயிருடன் இருக்கின்றார்களா அல்லது  இறந்துவிட்டனரா  என்று கூடத்  தெரியாமல்   வாழ்வது  எவ்வளவு  கொடுமை? முறையாக அஞலி  செலுத்தலமா  அல்லது  கூடாதா என்பது  கூட  அவர்களுக்குத்  தெரியாது. இக்கட்டான   இந்தச் சூழல்  ஆண்டுக்கணக்கில்கூடத் தொடரலாம்.

கட்டாயமாகக்  காணாமல் போகச் செய்யப்படுபவர்கள் குறித்த் ஐ.நா.சாசனம்  சென்ற  ஆண்டு  முதல்  அமுலுக்கு  வந்தது. ஆனால்,  கட்டாயமாகக்  காணாமகப் போகச்  செய்யப்படுதல்  இன்னமும் கவலைக்குரிய  வழக்கமாகவே  தொடர்கின்றது.

சில  நாடுகளில்  ஜனநாயகத்தை  முறையாகக்  கோருவோரை  அடக்கவோ  அல்லது பயங்கரவாதத்தை  அடக்கவோ அல்லது  குற்றச் செயல்களில்  ஈடுபடுவோரை  அடக்கவோ  இடு ஒரு  ஆயுதமாகவும்  பயன்படுத்தப் படுகின்றது.

ஆனால், இபடியான அனைத்துச்  சம்பவங்களிலும், கட்டாயமாகக்  காணாமல்  செய்யப்படுதல்  தடை  செய்யப்படவேண்டும்.தடித்து வைக்கப்பட்டுள்ளவர்கள்  சட்ட நடவடிக்கைக்குட்பட்டவர்கள் என்றும்,  அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை  அறியும் உரிமை  அவர்களது  குடும்பத்திற்கு உண்டு  என்றும் ஐ.நா. வலியுறுத்துகின்றது.

இலங்கை யுத்தத்தில்  மடிந்தோர்  பட்டியல்  உண்டா?  காணாமற்  போனோர் பட்டியல் உண்டா?  இறந்தோர்,  புலம் பெயர்ந்தோர்,  காணாமற்போனோர் .......தலை  சுற்றுகின்றது. ஐ.நா.வின்  அண்மைய  சாசனம்  இலங்கையைக் கருத்திற்  கொண்டுதான்  இயற்றப்பட்டதோ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.