Friday, September 2, 2011

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமியப் பெண்களுக்குப் புதிய சட்டம்.

இத்தாலி, பிரான்ஸ்,  பெல்ஜியம்  மற்றும்  ஸ்பெயினின்  சில பகுதிகளில் இஸ்லாமியப்  பெண்கள்  தங்கள்  முகத்தை  மூடும்  பர்தா அணியத் தடை  விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர்  கேட்டுக்  கொண்டால்,  இஸ்லாமியப்  பெண்கள்  தஙக்ள்  முகத் திரையை  விலக்கிக்  காட்டவேண்டும்,  இல்லை என்றால்  கைது செய்ய  வேண்டிவரும்  என்று,  ஆஸ்திரேலியாவின்  நியூ சவுத் வேல்ஸ்  மாகாணத்தில் சட்டம்  இயற்றப்பட்டது. குறிப்பாக இருசக்கர  வாகனங்களில்  செல்லும்  இஸ்லாமியப்  பெண்களைக்  கண்காணிக்கவே இச்சட்டம் என்று கூறப்படுகின்றது. இதே சட்டத்தை  விக்டோரியா  மாகாணமும்  இயற்றியுள்ளது.

தாக்குதலுக்குப்  பெண்களைத்  தேர்வு  செய்ய  அல்கொய்தா தீவிரமாக உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து  23 பேரைத் தேர்ந்தெடுக்கப்போவதாகவும், அவர்களில் 6 பேர் பெண்கள் என்றும் விக்கிலீக்ஸ் இணைய தளம்  தகவல்  வெளியிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.