Tuesday, September 13, 2011

இலவச மிக்சி, கிரைண்டரில் ரகசிய குறியீடு:தமிழக அரசு திட்டம்

நன்றி.tamil.yahoo.in
.
தமிழகம் முழுவதும் 1.85 கோடி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்முதற்கட்டமாக, 1,250 கோடி ரூபாய் மதிப்பில், கிராமப்புற மக்கள் 25 லட்சம் பேருக்கு, இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி  ஆகிய இலவசப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில், அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, இலவசத் திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து, அவர் விழா மைதானத்திற்கு செல்லவுள்ளார்.இலவசப்  பொருட்களை பொருத்தவரை, சந்தையில் பிரபலமான நிறுவனங்களிடம், சந்தை விலையை விட குறைந்த விலைக்கு, கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொருட்களின் தரம், சந்தையிலுள்ள பொருட்களின் தரத்தை விட அதிக அளவில் இருக்க, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மிக்சி தயாரிப்பு அனுமதி பெற்ற பிரபல நிறுவன அதிகாரி கூறியதாவது:சந்தையில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். ஆனால், அரசுத் திட்டப் பொருட்களைத் தயாரிக்க, அண்ணா பல்கலை மூலம் தயாரித்த, 300 பக்கங்கள் அடங்கிய தொழில்நுட்ப நிபந்தனையை கொடுத்தனர். அந்த நிபந்தனைகள் எங்களுக்கே ஆச்சர்யமானதாக உள்ளன. அந்த அளவுக்கு சிறிய உபகரணங்கள் முதல், பிளாஸ்டிக் பொருட்கள் வரை தரம் பார்த்து, தயாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த நிபந்தனைகளை, எதிர்காலத்தில் எங்களது வர்த்தக தயாரிப்புக்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இலவச மிக்சி, வெள்ளை நிறத்தில் இரண்டு ஜார்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

டேபிள் மின் விசிறி, வெள்ளை மற்றும் நீல நிறத்தில், உயர்தரமாகவும், டேபிள்டாப் கிரைண்டர் சந்தையில் மக்கள் விரும்பும் பிரவுன் நிறத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மின் விசிறியின் மையப் பகுதியிலும், கிரைண்டரின் வலப்பக்கத்திலும், மிக்சியின் பக்கவாட்டிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களிலும், அரசு முத்திரையுடன், தமிழக அரசின் இலவசத் திட்டம் 2011-2012 என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் தர உத்தரவாதம் கொண்ட இந்தப் பொருட்களுக்கு, தனித்தனியே ரகசியக் குறியீட்டு எண் தரப்பட்டுள்ளது. இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிந்துள்ளனர். அதை ஆய்வு செய்தால், ஒவ்வொரு பொருளும், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, எந்த பகுதியில் யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியும். இதனால், முறைகேடுகள் நடந்தால், தயாரிப்பாளர், அரசு அலுவலர், அரசியல்வாதி, பயனாளி, பொருட்களை முறைகேடாக வாங்குபவர் என, அனைவரும் சிக்கிக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இலவச பொருட்களை மிகத் தரமாக தயாரிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த பணிகளை, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை கண்காணிப்புடன், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை மேற்கொண்டது. வெளிப்படையான டெண்டர் அறிவிக்கப்பட்டு, டெண்டர் திறக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு, நிறுவனங்களின் நேர்மைத் தன்மை. உயர்தரம் ஆகியவற்றின் அடிப்படையில், 18 நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள்  வழங்கப்பட்டுள்ளன.


யாரிப்பு நிறுவனங்கள்டேபிள்டாப் கிரைண்டர்: சவுபாக்யா, பட்டர்பிளை, அமிர்தா, சாஸ்தா, ஜோதி, பொன்மணி, விஜயலஷ்மி, பி.வி.ஜி.,மிக்சி: பட்டர்பிளை, கிரீன்செப், காஞ்சன், பீஜியன், சகாரா, சன்பிளவர்மின் விசிறி: கிராம்ப்டன், பீஜியன், பட்டர்பிளை, மார்க்இவற்றில், கிரைண்டர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் கோவையை அடிப்படையாகக் கொண்ட பிரபல நிறுவனங்களாகும். பீஜியன் நிறுவனம், பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட  பிரபல மிக்சி, மின் விசிறி தயாரிப்பு நிறுவனமாகும். காஞ்சன், சகாரா நிறுவனங்கள் மும்பை மற்றும் வடமாநிலங்களில், மிக்சி தயாரிப்பில் புகழ் பெற்றவை. கிரீன்செப் நிறுவனம்  கர்நாடகாவில் பிரபலமான பெங்களூரு நிறுவனம்.- எச்.ஷேக்மைதீன் -

0 comments:

Post a Comment

Kindly post a comment.