Tuesday, September 13, 2011

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் படகில் தப்பிச் சென்ற 44 பேர் கைது

சட்ட விரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 44 பேரைக்  கிழக்குக் கடற்கரைப்  பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்யதுள்ளனர்.

நேற்று அதிகாலை நீர்கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்ட  படகினைக்  கடற்படையினர் மடக்கிப்  பிடித்ததாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் கமாண்டோ கோசலவர்ண குலசூரிய தெரிவித்தார்.

குறித்த படகிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை பேச்சாளரிடம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் இலங்கையர்களே, ஆனால் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போன்ற முழு விபரங்களை நாம் இன்னும் பெறவில்லை எனவே தற்போது அதுபற்றி கூறமுடியாது என்றார்.

இதுதொடர்பாக மற்றுமொரு கடற்படை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்கியிருந்ததனர். படகில் உலர் உணவுப்பொருட்களும் காணப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்டோர் படகுடன் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டனர் இவர்களுள் அநேகமானோர் மட்டக்களப்பு, அம்பாறை , கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்நதவர் என்றார்.

People smugglers in Sri Lanka charge about $US5,000 for a risky, one-way journey to Australia, but the navy has stepped up patrols to stop migrants illegally leaving the island's shores.


http://news.ninemsn.com.au/world/8297168/sri-lanka-halts-boat-heading-to-australia

0 comments:

Post a Comment

Kindly post a comment.