Sunday, September 18, 2011

இலங்கைக்கு டிசெம்பர் வரை காலக்கெடு : இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர்

http://www.4tamilmedia.com/newses/srilanka/655-2011-09-18-08-43-56

மனித உரிமை விவகாரங்களில், இந்த ஆண்டு இறுதிக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட வேண்டுமென இலங்கைக்கு பிரித்தானியா காலக்கெடு விதித்துள்ளது.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் பதில் அளித்து காத்திரமனா தீர்வுகளை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை செய்ய தவறினால் ஏனைய உலக நாடுகளுடன் இணைந்து, சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியாவும் அழுத்தம் கொடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.

சர்வதேச அழுத்தம் காரணமாக பலவந்தமாக விசாரணைகளை நடத்தாது, பக்க சார்பற்ற விசாரணைகளை நடத்தினாலேயே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பை இலங்கை அரசு பெற்றுக்கொள்ள முடியும், என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும், சேனல் 4 ஊடக ஆவணப்படமும், சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் இவ்வாறானதொரு எச்சரிக்கை முன்னர் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க தவறினால் 2013 இல் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் கூட்டத்தை புறக்கணிக்க நேரிடும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய தெற்காசியாவுக்கான அமெரிக்க தூதர் ரொபேர்ட் ஓ பிளேக், வடக்கு கிழக்கில் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்த கருத்துக்களுக்கு பதில் அளித்த கோத்தபாய ராஜபக்ச, அவ்வாறானதொரு தேவை இல்லை. அப்படி தேவை இருப்பின் அதனை ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவுக்குள் அமுல்படுத்தட்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நியமனத்தில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற தெரிவோ, அல்லது அந்தந்த மொழியை கொண்டோர் மட்டுமே அவரவர் பிரதேசங்களில் கடமையாற்ற வேண்டுமென்ற கட்டுப்பாடு இல்லை. இலங்கைக்குள் எவரும் எந்த பிரதேசத்திலும் கடமையாற்றலாம் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.