Tuesday, September 13, 2011

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில்மரங்களுக்கு ராக்கி கட்டி நூதனப் போராட்டம்






சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 3.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் திட்டத்துக்காகச்  சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 300 மரங்கள் வெட்டப்பட உள்ளன.  இதனை எதிர்த்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் மரங்களுக்கு ராக்கி கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

 "உலக வெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை மரங்கள் வெட்டப்படுவதால் தான் ஏற்படுகிறது. கீழ்ப்பாக்கம் பகுதி அதிக மாசு அடைந்துள்ளது. 3.5 ஏக்கரில் உள்ள சுமார் 300 மரங்களும் ஒருநாளைக்கு 50 டன் பிராண வாயுவை வெளியிடுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில் 100 ஆண்டுகள் பழமையான மரங்களும் உள்ளன.  மேலும் மாணவர்கள் கல்வி பயிலத் தேவையான அமைதியான சூழல் பாதிக்கப்படும். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் அருகில் ரயில் நிலையம் அமைய உள்ளதால், கல்லூரியின் அருகே ரயில் நிலையம் தேவைப்படாது. அதனால் இந்த முடிவை கைவிட வேண்டும். மேலும் இதற்காகப்  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்' என்று இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.