Tuesday, September 13, 2011

கூடலூரில் 12 அடி நீள ராஜ நாகம்



கூடலூர்,  பந்தலூர்  அருகே  சேரம்பாடி  பகுதியில்  தோட்டத்திற்குள்  நுழைந்த 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.  சேரம்பாடி நெல்லிக்குன்னு பகுதியில் உள்ள நீரோடையில் திங்கள்கிழமை காலை ராஜ நாகம் இருப்பது தெரிய வந்தது. அதைப் பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்தனர். 

சிறிது நேரத்தில் நீரோடையிலிருந்து வெளியேறி தோட்டத்திற்குள் ராஜநாகம் நுழைந்தது.  அப்பகுதியைச் சேர்ந்த தம்பான் என்ற இளைஞர் சாமர்த்தியமாக ராஜநாகத்தைப்  பிடித்தார் . உடனே வனத் துறைக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. சேரம்பாடி வனச் சரக அலுவலர் தேவராஜ் தலைமையில் வனக் காவலர் சிவகுமார் மற்றும் வன ஊழியர்கள் ராஜ நாகத்தை கோட்ட மூலா வனத்தில் விட்டனர்.  நன்றி:தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.