Monday, September 12, 2011

ஒரு கனமீட்டர் மண்ணில் 100,55,00000 செல் உயிர்களும், 51000-ம் பல்லுயிர் இனங்களும் அடங்கியுள்ளன.மண் இல்லையேல் மனிதன் இல்லை


 



 
பூமியில்  ஒரு  சதுர  அடி  மணல்  உருவாக  சுமார்  அறுநூறு  ஆண்டுகள்  ஆகின்றன  என்று  மன்வள  ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றனர்.  மிகக்  குறுமணல்,  குறுமணல்,  நடுத்தர  மணல்,.  பரு  மணல்,  நடுத்தரப்  பருமணல்,  மிகப்  பரு  மணல்  என்ற  வகைகள்  உள்ளன.

மண்  மேற்பரப்புக்கு  அடியில்  உள்ள  உயிர்ப்  பொருள்கள்  குறித்து  அறிந்து  கொள்வது வியப்பூட்டும்  அறிவியல்  செய்தியாகும். சராசரி  ஈரப்பதமுள்ள  மணல்  மேற்பரப்புக்கு  அடியில்  15 செ.மீ.  ஆழத்தில்  தோண்டி  எடுக்கப்படும்  ஒரு  கைப்பிடி  மணலில் ஒரு  லட்சம்  ஆல்காக்களும்  அறுபது கோடி  பாக்ட்ரீயாக்களும்,  நான்கு  லட்சம்  பூஞ்சான்களும்  உள்ளன.  ஒரு  கன  மீட்டர்  மண்ணில் நூறு  கோடியே  ஐம்பத்தைந்து  லட்சம்  செல்  உயிர்களும்,  51000-ம் பல்லுயிர்  இனங்களும்  அடங்கியுள்ளன. மின்னணு  நுண்ணோக்கி மூலம்  இவற்றை  எல்லாம்  நாம்  காணலாம்.  டன்  கணக்கில்  அள்ளிக்  கொண்டு  போகும்  மணலில்  எத்தனை  ஆயிரம்  கோடி  நுண்ணுயிர்கள்  அழிக்கப்படுகின்றன  என்பதை  எண்ணும்போது  இயற்கை  ஆர்வலர்களின்  நெஞ்சம்  பதறுகிறது.

தமிழகத்தில்  33  வகையான  ஆற்றுப்  படுகைகள்  உள்ளன. ஆயிரம்  ஆண்டுகள்  கூடி  இயற்கை 25  அடி  மணல்  உருவாக்குகின்றது. ஒரு  மீட்டர்  ஆழத்தில்தான்  மணல்  எடுக்க  வேண்டும்  என்பது  விதி. ஆனால்,  மணல்  கொள்ளையர்கள்  ஆறுகளையும்  ஓடைகளையும் வழித்து  மொட்டையாக்கி  வருகிறார்கள். பக்கத்து மாநிலங்களுக்கும்,  மொரீசியஸ் போன்ற வெளி நாட்டுக்கும்  மணல்  ஏற்றுமதி  செய்யப்படுகிறது

கடற்கரை  மணற்பரப்பில்  குவார்ட்ஸ்  எனும்  தாது  உள்ளது.  இதில்  உள்ள  சிலிக்கான்  என்னும்  பொருள்  இயற்கையான  கதிரியக்கம்  வருவதைத்  தடுக்கிறது. கடற்கரை  மணலைத்  தனியார்  அள்ள  ஊக்குவித்ததால், அந்தப்  பகுதிகளில்  புற்று நோய்  பரவி  வருகின்றது.குமரி மாவட்டத்தில் பெரும்பாலானோ  புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்கள்  என்று ஓர் ஆய்வு கூறுகின்றது.

மணலில்லாக்க்  கட்டுமானக்  கலவைகளைப்  பயன்படுத்தலாம். பாறைகளை உடைத்துத்  துகள்களாக்கி  மணல் எடுக்கலாம்.

மணல்  அள்ளுவதில்  இதே  நிலை தொடர்ந்தால்  தமிழகம்  பாலைவனம்  ஆகிவிடும்.அதே  வேளையில்  அளவோடு  பயன் படுத்தினால்  காலத்திற்கும்  மணல்  கிடைக்கும்.

ஹீப்ரு மொழியில்  ஆதாமா என்றால்  மண்  என்று  பொருள். உலகில்  தோன்றிய  முதல்  மனிதனுக்கு  ஆதாம் என்ற பெயர்  இச்சொல்லில்  இருந்துதான்  பிறந்ததாக  ஹிப்ரு மொழி  அறிஞர்கள்  கூறுகிறார்கள். ஜப்பான்  நாட்டில்  மண்ணை  வணங்குவதற்காகவே ஷிண்டோ  கோவில்கள்  உள்ளன. மண்  வழிபாடு  மூலம்  மண்ணின்  வரலாறுகளையும்,  அதன்  முக்கியத்துவத்தையும்  அறிய  முடிகிறது.

இயற்கையை  அழித்துவிட்டு  மனிதன்  வாழ முடியாது. மனித  குலத்தின்  ஆணிவேர்  மண்தான்.  மண்  மறைந்து விட்டால் அதோடு  மனித  இனமும்  மறைந்துவிடும்.


நன்றி;-ஜனசக்தி 12-09-2011 மாதா எழுதிய  காலந்தோறும்  மணல்  கட்டுரையிலிருந்து. 92454 23710


 

0 comments:

Post a Comment

Kindly post a comment.