Sunday, September 11, 2011

முதியோர் இல்லம் தொடங்குகிறார் கஸ்துரி!

tamil.yahoo.com
 அழகான  சிரிப்பாலும்,  அடடா சொல்ல  வைத்த  அழகாலும்,  மிஸ் சென்னை பட்டம்  வென்று  பரபரப்பாகப்   பேசபட்டவர்  கஸ்தூரி.  அம்மா சுமதி வழக்கறிஞராகவும்,  அப்பா  சங்கர்  பொறியாளராகவும்   இருந்ததால்  பி காம், பி எல், எம் பி ஏ   என்று படித்த  கஸ்துரி ,  ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்,  சின்னவர், இந்தியன் போன்ற வெற்றிப்  படங்களில் நடித்தார். பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் காணாமல் போன கஸ்தூரி, சிறு இடைவெளிக்கு பிறகு தமிழ் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகி,  இப்போது எட்டு படங்களைக்  கைவசம் வைத்துள்ளார், அதில் சோலோ டான்ஸ், மற்றும் முக்கிய ரோலும் உண்டு.

சமீபகாலமாகக்  குத்துபாட்டுகளில் அதிகம் ‌தெரிவது பற்றிக்  கேட்டால், ஹீரோயின் கட்டத்தை தாண்டி வந்து விட்டேன்,  இப்பொது என்னிடம் ஒரு கோணிப்  பையைக்  கட்டிகொண்டு ஆடச்  சொன்னாலோ, ஒரு தொழுநோயாளியாக நடிக்கச்  சொன்னால்    கூட நான் அப்படியே அந்த கேரக்டராவே  நடிச்சிடுவேன். ஒரு வில்லி கேரக்டரில் கூட நடிக்க விரும்புறேன். எனக்குத்  தேவை ஒரு சவாலான ரோல், அவ்ளோதான் என்று சொல்லும் கஸ்தூரி, சில சோகத்திலும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்.

அம்மா இறந்து ஒரு வருடம், அப்பா இறந்து மூன்று மாதம் என்று தவிப்பில், தன் பெற்றோர் பெயரில், உறவுகளை இழந்து நிற்பவர்களுகாக மிக விரைவில் முதியோர் இல்லம் தொடங்க இருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இது மட்டும் இல்லாது ஒரு குழந்தையின் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார். 

இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம். விரைவில் தெலுங்கு சேனலில் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருக்கிறார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.