Sunday, September 11, 2011

1945-ல் நிலவிய நாணயமான் அரசியல் மற்றும் குடும்பச் சூழநிலை ஓர் எடுத்துக்காட்டு.

ராமனாதபுரம்  ஜில்லா,  ஆலமரத்துப்பட்டி  ஜி.ராமச்சந்திரன்,  நீங்கள்  எல்லோரும்  அறிந்த  மனிதர்தான்.  ஜில்லா  விவசாய  சங்கத்தின்  காரியதரிசி  ரூ.10  மதிப்புள்ள  வெள்ளி  கப்;  ரூ  35  பெருமான  பசுமாடு  இரண்டையும்  கட்சி  வசமாக்கி  விட்டார்.  இதற்கு  மேலாக  ரூ  60  வசூலிக்கவும்  சபதம்  செய்திருக்கிறார்.

இதில்  விஷேசமிருக்கிறது.  இவரது  சகோதரி  நாராயணி  அம்மாள்  சாத்தூர்  தாலுகா  காங்கிரஸ்  கமிட்டியில்  பல  வருட  காலமாக  அங்கத்தினராயிருந்த  ஒரே  அம்மையார்,  காதில்  இருந்த  தோடுகளையும்  கழற்றித்  தந்தார்  கட்சி  நிதிக்கு.

தோழர்  ராமச்சந்திரனின்  மனைவியார்  சீதாலட்சுமி.  தியாகத்தில்  நாத்தனாருக்குப்  பின்வாங்கவில்லை.  கால்  கொலுசுகளைக்  கழற்றி  அளித்துவிட்டார்.  ரூ.  20  வசூலிப்பதாக  உறுதி  அளித்தார்.

இதைப்  பார்த்து  பூரிப்படைந்தவர்  ஜி.ராமச்சந்திரனின்  தாயார்தான்.  இவர்  காந்தி  பக்தி  நிறைந்தவர்.  கம்யூனிஸ்டுகளை  அவதூறாகப்  பேசுவது  நீசத்திலும்  நீசம்  என்பதைத்  தனது  குடும்ப  அனுபவத்திலேயே  கண்டு  கம்யூனிஸ்ட்  கட்சி  அனுதாபியானவர்.  தானும்  கம்யூனிச்ட்  கட்சிக்கு  நிதி  வசூலிக்கப்  போவதாக  அறிவித்தார்.

எப்படி  இருக்கிறது  இந்த  மாப்பிள்ளை-  மாட்டுப்  பெண்-  மாமியார்-  நாத்தனார்  சம்பந்தங்கள்.  இன்றைய  தமிழ்  நாட்டில்,  தியாகத்தில்  தோய்ந்த  கிராமக்  குடும்ப  வாழ்க்கை  எப்படித்  துவங்கும்  என்பதற்கு  இது  ஒரு  உதாரணம்.  இது  மாதிரிக்  குடும்பங்கள்  பெருகட்டும்  என்று  நீங்கள்  வாழ்த்துவீர்கள்.

நான்  சொல்கிரேன்.  இம்மாதிரி  தேச  பக்தியையும்,  கிஸான்  பக்தியையும்  நீராய்ப்  பாய்ச்சி,  தியாகம்  என்ற  உரமிட்டு  வளர்த்து  பல  விவசாயக்  குடும்பங்களை  இன்றே  செழிக்கச்  செய்துவரும்  விவசாய  சங்கங்களுக்கு  “ஜே”  என்பேன்.  செங்கொடி,  கிராமங்களைப்  புதுமைபெற்று  சோபிக்கச்  செய்கிறது.  கிராமக்  குடும்பங்களும்  அவ்வாறே!

(ஜனசக்தி 12-12-1945-ல்  குடும்பக் கூட்டுறவு  என்ற  தலைப்பில் ஆர்.கே. கண்ணன் எழுதியிருப்பது)

நன்றி. ஜனசக்தி, சுதந்திர தின விழாச்  சிறப்பு மலர், 2011

0 comments:

Post a Comment

Kindly post a comment.