Friday, September 9, 2011

நமது நாட்டில் நடந்த முக்கிய குண்டுவெடிப்புகள்

1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.

1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.

1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி
.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.

ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.

2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.
2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.

2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.

2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்
.
2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.

2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.

2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜூலை 26: ஆமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி
.
செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி

அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.

நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி
.
2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி
.
2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.

செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் பலி. 76 பேர் காயம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.