Monday, September 5, 2011

தங்க நகை ஏற்றுமதியில் ரூ.611 கோடி ஊழல்– தணிக்கை குழு கண்டுபிடிப்பு

தங்க நகை ஏற்றுமதியில் ரூ.611 கோடி ஊழல் – தணிக்கை குழு கண்டுபிடிப்பு

 தங்க நகை ஏற்றுமதியில் ரூ.611 கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எம்.எஸ்.டி.சி. நிறுவனம் மத்திய இரும்பு மற்றும் எஃகு அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள துணை நிறுவனம் ஆகும்.

இரும்பு ஆலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், உலோக கழிவு ஏற்றுமதியை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தையும் இது கொண்டுள்ளது.
மத்திய அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் நிறுவனங்களுக்கு “ரத்னா” என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இது ஒரு துணை நிறுவனம் என்பதால் “மினி ரத்னா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தங்க நகை ஆபரணங்கள் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தும் வேலையையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, அதன் அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்தார். அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தங்க நகை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் நிறைய ஓட்டைகள் காணப்படுகின்றன. நிர்வாகத்தில் உள்ள சிலர் லாபம் அடைவதற்காக ஏற்றுமதி ஒப்பந்தத்தில் விலை நிர்ணயம் தொடர்பாக குளறுபடிகளை செய்துள்ளனர். இடர்பாடுகளை பற்றி யோசிக்காமல் தனிப்பட்டவர்களின் லாபங்களை குறித்து யோசிக்கப்பட்டுள்ளது
.
தங்க நகை ஏற்றுமதிக்காக 47 வெளிநாட்டு நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டன. இவற்றில் 18 நிறுவனங்கள் தங்க நகை வர்த்தகத்தில் தொடர்பு இல்லாதவை. உணவுப் பொருள், இரும்பு வர்த்தகம், துணி வியாபாரம் இவற்றில் ஈடுபட்டு வருபவை.

மொத்த தங்க நகை ஏற்றுமதியில் இந்த நிறுவனங்கள் மட்டும் 39 சதவிகிதம் தங்க நகைகளை வாங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள், தங்க நகை ஏற்றுமதியின் போது ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க தேவையான இன்சூரன்ஸை செய்திருக்கவில்லை. சில வெளிநாட்டு நிறுவனங்கள் நிறைய பாக்கி தொகை வைத்துள்ளன. இவற்றை வசூலிக்க வழி தெரியாமல் எம்.எஸ்.டி.சி. நிறுவனம் திணறி வருகிறது. இதற்கெல்லாம் தவறான ஏற்றுமதி ஒப்பந்தம்தான் காரணம்.   அந்த வகையில் ரூ.611 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

இவ்வாறு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு ஊழல் விவகாரங்களால் சிக்கி தவித்து வரும் மத்திய அரசுக்கு எம்.எஸ்.டி.சி. விவகாரம் மேலும் ஒரு தலைவலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

தங்க நகை விற்பனையில் ஆண்டொன்றிற்கு முப்பது கோடி ஊழல் நடைபெறுவதை , ஸ்பெக்டரத்தை மிஞ்சிய தங்க மோசடி என்று மீடியா வாய்ஸ் என்ற பத்திரிக்கை 20-08-2011 இதழில் வெளியிட்டுள்ளதும் ஈண்டு  நினைவுகூறத் தக்கது.

2 comments:

  1. நண்பர்களே ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள www.exportsguide.blogspot.com என்ற வலைப்பக்கத்திற்கு வாருங்கள்.

    ReplyDelete
  2. நண்பர்களே ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள www.exportsguide.blogspot.com என்ற வலைப்பக்கத்திற்கு வாருங்கள்

    ReplyDelete

Kindly post a comment.