Saturday, September 10, 2011

உயர் பாதுகாப்பு வலயங்களால் 42,000 பேர் இன்னும் பாதிப்பு; உயர் நீதிமன்றுக்கு யாழ்.செயலகம் அறிக்கை


http://onlineuthayan.com/

போர் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேற்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாது காப்பு வலயங்களைச் சேர்ந்த 42 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமராமல் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்கிறார்கள்
.
உயர் நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. வலி.வடக்கைச் சேர்ந்த விவசாயிகளால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நேற்றுமுன் தினம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது யாழ். மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட மனுவிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாகத்தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலங்களைத் இழந்து விட்டார்கள் என்று தெரிவித்தே வலி. வடக்கு விவசாயிகள் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
யாழ். மாவட்டச் செயலகம் முன்வைத்த ஆவணத்தின் அடிப்படையில் 11,648 குடும்பங்களைச் சேர்ந்த 42,505 பேர் சங்கானை, சாவகச்சேரி, கரவெட்டி, கோப்பாய், காரைநகர் ஆகிய உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

தெல்லிப்பளையைச் சேர்ந்த 6,928 குடும்பங்களும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டி உள்ளன என்று மாவட்டச் செயலகத்தின் அறிக்கை கூறுகின்றது. பலாலியைச் சுற்றி உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த 7,456 குடும்பங்களையும் மீளக்குடியமர்த்துமாறு 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்த போதும் அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று எந்த ஒரு பகுதியையும் அரசோ இராணுவத்தினரோ வரையறுத்து வைத்திருக்க முடியாது என்று எதிர்க் கட்சியினர் சுட்டிக்காட்டி வருகின்ற போதும் இந்த 40 ஆயிரம் மக்கள் உயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.