Thursday, September 29, 2011

இலங்கையில் 30 இலட்சம் நாய்கள்: இரண்டாயிரம் பேர் விசர்நாய்க்கடிக்கு ஆளாகும் நிலை _

சுகாதார அமைச்சிடம் தற்போதுள்ள தரவுகளின்படி இலங்கையில் 30 இலட்சம் நாய்கள் உள்ளன. வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். வருடாந்தம் 32 பேர் மரணிக்கின்றனர்.

விசர் நாய்க்கடிக்கு இலக்காகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவென அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.

உலக விசர்நாய்க்கடி எதிர்ப்புத் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் நோய் ஒழிப்பு தொடர்பாக மக்களுக்கு தெரிவுபடுத்தும் பல செயற்திட்டங்களை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

கொள்கையளவில் நாய்களை கொல்வதில்லை என அரசு தீர்மானித்துள்ள போதும் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. சத்திர சிகிச்சை மூலமும் தடுப்பூசி மூலமும் கருத்தடை செய்யப்படுகிறது. _

Short URL: http://kilakkutoday.com/?p=1040

0 comments:

Post a Comment

Kindly post a comment.