Friday, September 2, 2011

வேளச்சேரி வனச்சரகத்தில் 22 நல்லபாம்பு முட்டைகள் குஞ்சு பொரித்தன

வேளச்சேரி : கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகில், நல்லபாம்புடன் மீட்கப்பட்டு அடை காக்கப்பட்ட 22 முட்டைகள், வேளச்சேரி வனச்சரகத்தில் குஞ்சு பொரித்தன. கிண்டி ரேஸ் கோர்ட் மைதானம் அருகில், கடந்த சில நாட்களுக்கு முன், நல்லபாம்பு ஒன்று இருப்பதாகத்  தகவல் வந்தது. இதையடுத்து, வேளச்சேரி வனச்சரக ஊழியர்கள் அங்கு சென்று, நல்லபாம்பு மற்றும் அதன் 22 முட்டைகளை மீட்டனர். அந்த முட்டைகள் அடை காக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், அவை குஞ்சு பொரித்துள்ளன. தற்போது, அவற்றின் தோல் உரிந்த நிலையில், அவைகளுக்கு உணவாகச்  சிறு பூச்சிகள் அளிக்கப்படுகின்றன.  வேளச்சேரி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், "பிறந்து சில நாட்களே ஆன பாம்பு குட்டிகளுக்கு கூட, விஷ வீரியம் அதிகம் உண்டு.

பொதுவாக நல்லபாம்புகள் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது அல்ல. ஆனால், அதை துன்புறுத்தினால் பதிலடி கொடுக்கும். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, நல்லபாம்புகளை அடித்து துன்புறுத்தினாலோ அல்லது கொலை செய்தாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.  ஆதலால் , இந்த பாம்பு குட்டிகள்,  அடுத்த சில நாட்களில், அடர்ந்த வனப்பகுதிகளில் விடப்படும்'  என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.