Monday, September 26, 2011

நேபாள விமான விபத்தில் பயணித்த 19பேர் பலி!



நேபாளம், காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் ஞாயிறு காலை ஆறு முப்பது மணியளவில் புறப்பட்டுள்ளது.

காத்மாண்டுக்குக் கிழக்கே இருபது கிலோமீட்டர் தூரத்தில் லலித்பூர் மாவட்டத்தில் விஷ்ணு நாராயணர் கோவில் உள்ளது. இதன் அருகில் உள்ள கோதண்ட மலையில் காலை ஏழு மணி முப்பது நிமிடங்கள் அளவில் மோதிச் சிதறியது.

விமானத்தில் பயணித்த 19பேரும் உயிரிழந்தனர். இதில் பத்து இந்தியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர், மூன்று நேபாள நாட்டவர், மூன்று விமான ஊழியர்கள் ஆவர்.

காத்மாண்டுவில் செயல்படும் ஐ.நா.வின் யுனிசெப் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரி, பங்கஜ் மேத்தா, அவரது மனைவி சாயா, இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவர் எம்.மணிமாறன், சங்க உறுப்பினர்கள், கே.தியாகராஜன், மகாலிஙம், எம்.வி.மருதாச்சலம், கனகசபேசன், கே.தனசேகரன், ஆர்.எம்.மீனாட்சி சுந்தரம், ஏ.கே.கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்த இந்தியராவர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.