Tuesday, September 13, 2011

மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயதுத் தாத்தா



http://www.tharavu.com/





கணவன் மனைவி இடையே பாசப்  பிணைப்பு இருந்தால் 100 ஆண்டுகளைத் தாண்டினாலும் இளமை யோடு வாழலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் நாகர்கோவில்  வடசேரியைச் சேர்ந்த இராமன்ஆசாரி வள்ளியம்மாள் தம்பதி.

வடசேரியைச் சேர்ந்த இராமன்ஆசாரி மர வேலைகள் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள். கணவருக்கு உதவியாக இருக்கிறார்.

இராமன்ஆசாரிக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால் இராமன்ஆசாரியும், வள்ளியம்மாளும் இன்றும் அந்த பகுதியில் இணை பிரியாத தம்பதிகளாக வலம் வருகிறார்கள். இராமன்ஆசாரிக்கு இன்று 104 வயது பிறந்தது. இதை சிறப்பாகக் கொண்டாட அவரது கொள்ளுப்பேரன்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரம்மாண்ட கேக் செய்து வைக்கப்பட்டிருந்தது. இராமன் ஆசாரி கேக் வெட்டி அதனை அன்பு மனைவிக்கு ஆசையுடன் ஊட்டினார். உறவுகளும், சொந்தங்களும், இதைப்பார்த்து மகிழ்ந்தனர். இது போன்ற வாழ்க்கையைத்  தாங்களும் வாழ்ந்திட அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

இதுபற்றி இராமன்ஆசாரியின் மகன் கூறும்போது, எங்களின் தந்தை இதுவரை பல விபத்துக்களில் சிக்கி உயிர் பிழைத்து உள்ளார். மோட்டார் சைக்கிள், பஸ், ரெயில் விபத்தில் கூட சிக்கி இருக்கிறார். இதற்காக மட்டும் ஒரிருநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல் நலக்குறைவுக்காக ஒரு நாள் கூட அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. மூலிகை மருந்து தான் அவரது உடல் நலனுக்கு காரணம்.

தனது உடல் சோர்வுக்கு மூலிகை மருந்துகளையே பயன்படுத்துவார். அதையும் அவரே தேடிக் கண்டு பிடித்து மருந்தாக்கி அருந்துவார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உதாரணம். அது எதிர்கால சந்ததிக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பியதால் இந்த விழாவை எடுத்தோம். இதில் தந்தையின் கொள்ளுப் பேரன்கள் பேத்திகளும்  குடும்பத்துடன் கலந்து கொண்டு அவரிடம் வாழ்த்துப் பெற்றோம் என்றார்.
http://www.tharavu.com/
நாகர்கோவில்  செய்தி  இலங்கைப்  பத்திரிக்கை  ”தரவி”லிருந்து
--

0 comments:

Post a Comment

Kindly post a comment.