மூவரின் தூக்குத் தண்டனை ரத்து கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று "அபிடவிட்' தாக்கல் செய்கிறார் வழக்குரைஞர் இரா. ராஜீவ்காந்தி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிரமாண வாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்யப்போவதாக வழக்குரைஞர் இரா. ராஜீவ்காந்தி கூறினார். தாக்கல்
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் இம்மாதம் 12ஆம் தேதி நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவரையும் செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை தூக்கிலிட சிறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்த தகவல் தண்டனைக் கைதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் சிறைக்குள் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிறை அதிகாரிகள் முன்னிலையில் சிறை மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையை தினமும் பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வேலூர் சிறையில் இம் மூவரையும் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்துசெய்யக் கோரி மூவரின் சார்பிலும் திங்கள்கிழமை "அபிடவிட்' தாக்கல் செய்ய உள்ளோம். இதற்கான பிரமாண வாக்குமூல பத்திரத்தில் மூவரிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும்போது ராம் ஜேத்மலானி, யுக்முகுக் வாகித் செüத்ரி, காலின் கான்சிலிஸ் ஆகிய மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட உள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மூவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை என்ற பெயரில் உளவுத்துறை போலீஸôர் தங்களை சித்ரவதை செய்வதாக மூவரும் எங்களிடம் கூறினர்.
இதுகுறித்து சிறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். வழக்குரைஞர்கள் க.பாலாஜி, வே.விஜயராகவன், இரா.ஆனந்தராஜ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.