தமிழகத்தில் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றவாளிகளாக சிறை வகை;கப்பட்டு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட கைதிகளை தூக்குத் தண்டணையிலிருந்து காப்பாற்றும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க மூன்று வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலையிட்டு மூன்று உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதத்தில் இருப்பவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தூக்குத் தண்ணடனையாக நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனையை தடுத்து நிறுத்த முதல்வருக்கு அதகிhரம் உண்டு என்றும் தமிழக மக்களின் உணர்வை புரிந்து முதல்வர் இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி வருகிறார்கள். திரைத்துறையினர், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், அரசில்வாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
http://www.globaltamilnews.net/Home/tabid/38/language/en-US/Default.aspx
0 comments:
Post a Comment
Kindly post a comment.